செய்திகள்

தெற்கு ரெயில்வே புதிய பொது மேலாளராக ஜான் தாமஸ் பொறுப்பேற்பு

Spread the love

சென்னை, செப்.21-

தெற்கு ரெயில்வே புதிய பொது மேலாளராக ஜான் தாமஸ் பொறுப்பேற்றார். இவர் இந்தியன் ரெயில் சேவை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் 1982-வது ஆண்டு பிரிவை சேர்ந்தவர்.

ஜான் தாமஸ், தனது இளங்கலை பட்டப்படிப்பை சண்டிகரில் உள்ள, பஞ்சாப் என்ஜினீயரிங் கல்லூரியில் முடித்துள்ளார். இவர் இந்தியன் ரெயில்வேயில் தனது சேவையை 1984-வது ஆண்டு தொடங்கினார். பின் இவர் மத்திய ரெயில்வே, தென் மத்திய ரெயில்வே, தெற்கு ரெயில்வே என தனது பணியை தொடர்ந்தார்.

இதையடுத்து ஜான் தாமஸ் சென்னை கோட்டத்தின் கூடுதல் பொது மேலாளராகவும், தெற்கு ரெயில்வே, தென் மத்திய ரெயில்வேயில் முதன்மை எலக்ட்ரிக்கல் என்ஜினீயராகவும், முதன்மை பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். மத்திய ரெயில்வேயில், சோலாப்பூர் ரெயில்வே கோட்ட மேலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

மத்திய அரசு இவருக்கு 2016-வது ஆண்டில், தேசிய ஆற்றல் பாதுகாப்பு விருது வழங்கி சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு தென் மத்திய ரெயில்வேயில் கூடுதல் பொது மேலாளராக பணியாற்றிய ஜான் தாமஸ் தற்போது தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளராக பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *