செய்திகள்

ஜோ பிடன் குடும்பம் குற்றப் பின்னணி கொண்டது: தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் பேச்சு

வாஷிங்டன், அக்.18–

ஜோ பிடனின் குடும்பம் ஓர் குற்றப் பின்னணி கொண்ட குடும்பம் என தேர்தல் பிரச்சாரத்தின்போது டிரம்ப் பேசினார்.

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

நேற்று அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது டிரம்ப் பேசுகையில், தனக்கு அளிக்கப்பட்ட உயர்ரக சிகிச்சை போல அனைத்து அமெரிக்கர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.

டிரம்ப்புக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை உயர்தரமானது. இது அனைத்து அமெரிக்கர்களுக்கும் கிடைக்காது என முன்னதாக ஜனநாயக கட்சி குற்றஞ்சாட்டி இருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜோ பிடன் என்ற பின்னடைவுக்கும் டிரம்ப் என்கிற முன்னேற்றத்திற்கும் நடக்கும் பலப்பரிட்சைதான் இந்த தேர்தல் என கூறினார்.

இதனைத் தொடர்ந்து மிச்சிகன் மாகாணத்தில் ஊர்வலமாக சென்று பிரச்சாரம் செய்த டிரம்ப் ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரிக்கும். ஜோ பிடன் ஆட்சிக்கு வந்தால் தடுப்பு மருந்து வரத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தி கொரோனாவிலிருந்து குணமாகும் சதவீதத்தை குறைப்பார் எனக் கூறினார்.

விரைவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும். ஜோ பிடனின் குடும்பம் ஓர் குற்றப்பின்னணி கொண்ட குடும்பம் என டிரம்ப் கடுமையாக பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *