வர்த்தகம்

ஹூண்டாய் கிரெட்டா சொகுசு காருக்கு ஜே.கே. டயர்: பிரத்யேக உற்பத்திக்கு கூட்டு முயற்சி

சென்னை, ஜன.11–

இந்திய டயர் தொழில் துறையின் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகவும், ரேடியல் டயர் தொழில்நுட்பத்தின் முன்னோடியாக திகழும் ஜே.கே. டயர் நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டார் கிரெட்டா சொகுசு காருக்கு பிரத்யேக டயர் தயாரிப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக, ஜே.கே. டயர் இந்திய சாலைகளுக்கு மிகவும் பொருத்தமான உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜே.கே. டயர் அதன் யுஎக்ஸ் ராயல் 215/60 ஆர்17 ரேடியல் டயரை ஹூண்டாய் கிரெட்டா கார் மற்றும் பிரிமியம் வகை கார்களுக்கு சிறந்த தொழில்நுட்பம், ஒப்பிடமுடியாத செயல்திறன், சொகுசு வசதிகளுடன் வழங்குகிறது. ஜே.கே. டயர் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் வி.கே.மிஸ்ரா பேசுகையில், ஜே.கே. டயரின் சிறந்த தொழில்நுட்பங்கள் பல நிலப்பரப்புகளில் கிரெட்டாவை ஓட்டும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கூறினார். ஹூண்டாய் மோட்டார் இந்தியா தரப்பில், “புத்தம் – புதிய கிரெட்டா, சொகுசு கார் கடந்த ஆண்டு மார்ச் 2020–ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சொகுசு காருக்கு முன் உதாரணமாக வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த செயல்திறன், இணையற்ற சொகுசு வசதியை இந்த வாகனம் வழங்கி வருவதால், இப்புதிய கிரெட்டா வாடிக்கையாளர்களின் விருப்பமான பிராண்டாக தொடர்ந்து நீடிக்கிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *