செய்திகள்

காலநிலைமாற்றம்: ரூ. 5100 கோடி நன்கொடை வழங்கிய பெசோஸ்

நியூயார்க், நவ. 21-

ரூ. 5,100 கோடியை காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட உலக பெரும் பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் நன்கொடையாக வழங்கி உள்ளார்.

உலகின் மிக பெரிய பணக்காரணரான ஜெப் பெசோஸ் ‘Bezos Earth Fund’ மூலம் 16 நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து 684 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்திய மதிப்பில் (5072,72,52,600) சுமார் ரூ.5ஆயிரத்து 100 கோடி ஆகும்.

யு.எஸ். செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனிடம் தாக்கல் செய்த தகவலின்படி, உலகின் பணக்கார ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசானில் 220,825 பங்குகளை நன்கொடையாக வழங்கினார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அமேசான் நிறுவனர் இந்த ஆண்டு 856 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வழங்கியுள்ளார். அவருடைய தற்போதைய மதிப்பு183.6 பில்லியன் டாலராக மதிப்பிடுகிறது.

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான 10 பில்லியன் டாலர் முயற்சியாக பெசோஸ் பிப்ரவரி மாதம் பூமி நிதியத்தை அறிவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி மற்றும் உலக வனவிலங்கு நிதியம் உட்பட 791 மில்லியன் டாலர் நன்கொடைகளைப் பெற்ற முதல் பெரும் நிறுவனங்களின் பெயர்களை அவர் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *