செய்திகள்

மேடுபள்ளங்களில் சீறிப் பாயும் ஜீப் கேம்பஸ் கார் 2 புதிய ரகம் அறிமுகம்

Spread the love

சென்னை, ஜன. 23–

மலைப்பிரதேசம் மேடுபள்ளங்களிலும், ஆற்றைக் கடந்து செல்லவும் ஏற்ற சொகுசு ஜீப் கேம்பஸ் சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 9 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர் உள்ளது. ஜீப்களில் உள்ளது போல 4 சக்கரங்களும் சுழலுவதால், சகதியில் டயர் சிக்கினாலும், சீறி பாய்ந்து செல்லும் திறமை படைத்தது ஜீப் கேம்பஸ் டீசல் கார் ஆகும். இதில் 2 ரகம் உள்ளது. இவை லாங்டியூட், மற்றும் லிமிட் பிளஸ் ஆகும். உலக தர மாசு கட்டுப்பாடு கடுமையான ‘6’ ரக விதிக்கு ஏற்ப செயல்படுகிறது.

ஜீப் கேம்பஸ் லாங்டியூட் கார் விலை ரூ.21.96 லட்சம் விலையிலும் , லிமிடெட் பிளஸ் கார் ரூ.24.99 லட்சம் விலையிலும் கிடைக்கிறது. 80 ஷோரூம்களில் பதிவு செய்யலாம். சோதனை ஓட்டம் செய்யலாம்.

உள்ளுரில் உருவாக்கப்பட்டுள்ள பிஎஸ் 6 இணக்கத்தன்மை கொண்ட2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜினை இந்தியாவில் தயாரித்துள்ளோம். ஜீப் கேம்பஸ் வாகனங்களை லாங்கிட்யூட் வாகனம் குரூஸ்கண்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா மற்றும் 7-இன்சு திரை வீடியோ, ஆடியோ வசதி முன், பின் சீட் பகுதிகளில் ஏர்கண்டீஷனிங் மற்றும் இரு கலர் இன்டீரியர் தோற்றம் அழகை தருகிறது. புஷ் பட்டன் ஸ்டார்ட் போன்ற பல்வேறு வசதிகளை இந்த லாங்கிட்யூட் கார் கொண்டுள்ளது.

ஜீப் கேம்பஸ் லிமிட் பிளஸ் பெரிய அளவிலான 8.4 இன்ச் வீடியோ திரை, லெதர் உட்புறங்கள், ஓட்டுனருக்கான 8 ரக ஆற்றல் கொண்டஇருக்கை, தானிங்கி ஹெட்லேம்ப், மழையை உணரும் வைப்பர், எதிரில் பிரகாச ஒளியுடன் கார் வந்தால் ஆட்டோ – டிம்மிங் வசதி மற்றும் விபத்து காலத்தில் காப்பாற்றும் 6 ஏர்பேக் உட்பட்ட பல்வேறு வசதிகளை வழங்குகிறது மற்றும் அலாய் வீல்களையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *