செய்திகள்

கர்நாடக மாநில அண்ணா தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

பெங்களூர், மார்ச் 3–

கர்நாடக மாநில அண்ணா தி.மு.க. சார்பில் பெங்களூருவில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கர்நாடக மாநில அண்ணா தி.மு.க. சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கலாசிபாளையம் பாப்பண்ணா கார்டன் பகுதியில் சிக்கபேட்டை தொகுதி முன்னாள் செயலாளர் கே. முத்து தலைமையில் நடைபெற்றது. கழக செயல்வீரர் ஏழமலை வரவேற்ப்புரை நிகழ்த்தினார் இதில் மாநில கழக இணை செயலாளர் எஸ்.டி.குமார். தலைமை கழக சிறப்பு பேச்சாளர் குலாப்ஜான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பரை ஆற்றினார்கள்.

முன்னதாக ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பெங்களூரில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பின்னர் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோருக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது. கழக முன்னோடிகளுக்கு சால்வை மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

தலைமை கழக பேச்சாளர் குலாப்ஜான் பேசுகையில், தமிழக மக்கள் அனைவராலும் ஜெயலலிதா, அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். மறைவிற்க்கு பின் அண்ணா தி.மு.க.வை கட்டி காத்து வலிமையான கட்சியாக உருவாக்கி ஆட்சி கட்டிலில் அமரவைத்தார். தமிழ்நாட்டு மக்களுக்கு அகில உலகமே வியந்து பாராட்டும் விதத்தில் பல நல்ல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி ஏழை மக்கள் வாழ்வில் ஏற்றம் காண செய்தார் என்று கூறினார்.

எஸ்.டி.குமார் பேசுகையில், உலகத்திலேயே மக்களை நேசித்த இரு பெரும் தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆவார்கள். மக்களும் இவர்கள் மண்ணுலகை விட்டு மறைந்து விட்டாலும் இன்றும் நேசிக்கின்றார்கள். அண்ணா தி.மு.க.வை யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா. அவர் தமிழகத்தில் கொண்டு வந்த பலமக்கள் முன்னேற்ற திட்டங்கள் உலகளவில் பேசப்படுகின்றது. அவரின் மறைவிற்கு பின் கழகத்தையும் ஆட்சியையும் துரோகிகளிடமிருந்து கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்டி காத்து நம்மை எல்லாம் வழி நடத்தி வருகின்றனர். இரு பெரும் தலைவர்களின் தலைமையில் கர்நாடக மாநிலத்தில் கழக வளர்ச்சிக்கு நாம் அனைவரும் பாடு படுவோம். தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாவின் அரசு மூன்றாவது முறையாக எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைய நாம் அனைவரும் தமிழ்நாடு சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டு எம்.ஜி.ஆரின் வெற்றி சின்னமான இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்து கழக அரசு அமைய பாடு படவேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் தலைமை பொது குழு உறுப்பினர்கள் பி.ரவிக்குமார், பேரவை இணை செயலாளர் மணிவன்னன், முன்னாள் மாநில நிர்வாகிகள் நீலநாராயணன், சேரன், புலிகேசி நகர் தொகுதி செயலாளர் சாம்ராஜ், துணை செயலாளர் ஜி.நட்ராஜ், வட்டசெயலாளர் சோபாகுமார், சிவாஜிநகர் கே. பச்சையப்பன், முனியன், சர்க்கிள்ராஜா, மகாலிங்கம், நாகராஜ், வீராசாமி, சிவலிங்கம், ராமு, சிங்காரம்மா, மகளிரணி நிர்வாகிகள் சாந்திராமதாஸ், சந்திரிக்கா, கீதா, சாந்தம்மா, அன்னியம்மா உள்ளிட்ட நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். ராஜேஸ்முத்து நன்றி உரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *