வர்த்தகம்

இசுசூ மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார்கள் அறிமுகம்

கோவை, அக். 17

இசுசூ மோட்டார்ஸ் இந்தியா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பிஎஸ் VI கம்பிளையண்ட் டி- மேக்ஸ் ரெகுலர் கேப் மற்றும் டி- மேக்ஸ் எஸ் -கேப் ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வாகனங்களை அறிமுகம் செய்வது குறித்து பேசிய இசுசூ மோட்டார்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சுகுவோ புகுமுரா இசுசூ, மோட்டார்ஸ் இந்தியா கமெர்ஷியல் ரேஞ்சு வாகனங்களை விரிவுபடுத்தும் வகையில் தனது பரந்த அளவிலான தயாரிப்பில் 1,710 கிகி பேலோடுடன் கூடிய புதிய டி- மேக்ஸ் சூப்பர் ஸ்ட்ராங்கை சேர்த்துள்ளது.

இந்த புதிய வாகன சேர்ப்புடன், இசுசூ மோட்டார்ஸ் இந்தியா இப்போது டி- மேக்ஸ் ரெகுலர் கேப் ஹை-ரைடுடன் கூடிய பிளாட் டெக், டி- மேக்ஸ் ரெகுலர் கேப்-சேசிஸ், எஸ் -கேப் ஸ்டாண்டர்ட்-ரைடு, எஸ் கேப் ஹை-ரைடு மற்றும் புதிய , டி- மேக்ஸ் ரெகுலர் கேப் சூப்பர் ஸ்ட்ராங் என அனைத்து வணிக மற்றும் தொழில்சார் தேவைகளுக்கு ஏற்ப பல வேரியண்ட்டுகளை வழங்குகிறது. 2.5 லிட்டர் இசுசூ 4 ஜெஏ 1 என்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த மேம்பட்ட கமெர்ஷியல் வாகனங்கள், அவற்றின் புதிய ஸ்டைலிங் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பின் வழியாக, ஒரு துடிப்பான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றன.

தொழில்துறையில் வணிக வாகன பிரிவில் பல பர்ஸ்ட் ன் சிக்மன்ட் இந்த வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. டி- மேக்ஸ் ரெகுலர் மற்றும் டி- மேக்ஸ் எஸ் -கேப் – ஸ்பிளாஷ் ஒயிட் மற்றும் டைட்டானியம் சில்வர் வண்ணங்களுடன், ஒரு புத்தம் புதிய கலினா கிரே வண்ணத்துடனும் கிடைக்கும். புதிய டி- மேக்ஸ் சூப்பர் ஸ்ட்ராங்கின் விலை ரூ.8,38,929 (எக்ஸ்-ஷோரூம், மும்பை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் விழாக்காலத்தில், வரையறுக்கப்பட்ட அளவில் முழு டி- மேக்ஸ் வரம்பிற்கும் கவர்ச்சிகரமான அறிமுக விலை வழங்கப்படவுள்ளது.” என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *