செய்திகள்

1–0 கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி ஏடிகே மோகன் பகான் ஹாட்ரிக் வெற்றி

மர்காவ், டிச. 4–

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 15-வது ஆட்டத்தில் 1-–0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி ஏடிகே மோகன் பகான் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

7வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 15வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்சி அணியும், ஏடிகே மோகன் பகான் அணியும் மோதின. இதில் ஏற்கனவே விளையாடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்ற 3வது நோக்கி ஏடிகே மோகன் பகான் அணி களம் இறங்கியது. இதே நேரத்தில் முதல் வெற்றியை நோக்கி ஒடிசா அணி களம் இறங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் ஒடிசாவுக்கும், 8-வது நிமிடத்தில் மோகன் பகானுக்கும் ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, இரண்டு அணிகளும் அதில் கோல் அடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் கோல் இல்லாமல் முடிந்தது.

2-ஆவது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக விளையாடினர். ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் ஏடிகே மோகன் பகான் அணி வீரர் தீரி பாஸ் கொடுத்த பந்தை ராய் கிருஷ்ணா கோலாக மாற்றினார். இதனால் 1-–0 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணி தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து 9 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியிலில் முதலிடத்தில் உள்ளது.

சென்னையின் எப்.சி. 2வது வெற்றி பெறுமா? பெங்களூருவுடன் இன்று மோதல்

7வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 16வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு பாம்போலிம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னையின் எப்.சி. அணியும், பெங்களூர் எப்.சி. அணியும் மோதுகின்றன. சென்னையின் எப்.சி. அணியை பொறுத்த வரையில் ஏற்கனவே விளையாடிய 2 போட்டிகளில் 1 வெற்றியும், ஒன்று டிராவிலும் முடிவடைந்ததால் 2 வது வெற்றியை நோக்கி களம் இறங்குகிறது. பெங்களூர் எப்.சி. அணி ஏற்கனவே விளையாடிய 2 போட்களும் டிராவில் முடிந்ததால் முதல் வெற்றியை நோக்கி களம் இறங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *