வர்த்தகம்

யுனைடெட் வே இந்தியா நிறுவன முதலீடு மாநாடு

சென்னை, பிப்.18–

யுனைடெட் வே, சென்னை ஏற்பாடு செய்த வருடாந்திர நிதித் திரட்டும் ‘மார்க்கெட்ஸ் அண்ட் எகானமி 2021’நிகழ்ச்சியில் வங்கி, ஈக்விட்டி சந்தைகள், தொழில் முதலீடு மற்றும் உள்கட்டுமான துறைகளை சேர்ந்த சிறந்த நிபுணர்களும் தொழில் முறையினரும் இதில் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்தனர். இணையம் வழியாக இந்தியா முழுவதிலும் இருந்து பங்கேற்ற பல்துறை நிபுணர்கள் பதில் அளித்தனர்.

நிகழ்வின் தலைமை உரை நிகழ்த்திய எச்டிஎப்சி வங்கியின் சேர்மன் தீபக் பரேக், இந்திய பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த தனது நம்பிக்கையை தெரிவித்தார்.

செப்டம்பர் 2020 முதல் ஜிஎஸ்டி வசூல், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், இருசக்கர வாகன விற்பனை, மின்சார நுகர்வு போன்ற முக்கிய அம்சங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான அளவில் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரியல் எஸ்டேட் முதலீடுகள் குறித்து பேசிய டாடா ரியால்டி நிர்வாக இயக்குனர் சஞ்சய் தத்,நீண்டகாலமாக மந்தமாக இருந்த ரியல் எஸ்டேட் துறை தற்போது வேகமான வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப தயாராக உள்ளதாக தெரிவித்தார். வணிக ரீதியான ரியல் எஸ்டேட் துறையின் பலமான வளர்ச்சி தொடர்வதையும், மூன்று ரியல் எஸ்டேட் முதலீட்டு நிறுவனங்கள் (REITS) முதலீட்டில் பங்கேற்பதை சுட்டிக்காட்டியும் பேசினார்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அலுவலக இடங்கள் மற்றும் வாடகை வளர்ச்சி நிலையாக இருந்ததால், இத்துறை இனி மேலும் சிறப்பாக செயல்படும் என்ற எதிர்ப்பார்ப்பை அவர் வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதி முழுவதையும் சமூக நலத் திட்டங்களில் முதலீடு செய்கிறது யுனைடெட் வே இந்தியா. இத்தொகை தமிழகத்தில் உள்ள பின்தங்கிய மக்களுக்கு சிறந்த கல்வி, நிலையான வருவாய், சுத்தமான குடிநீர் மற்றும் மேம்பட்ட வாழ்க்கை அமைத்துத் தர செலவிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *