செய்திகள்

21–ந் தேதி உலகத் தாய்மொழி நாள்:தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தில் பன்னாட்டு உரையரங்கம்

சென்னை, பிப். 19–

21–ந் தேதி உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தில் பன்னாட்டு உரையரங்கம் நடைபெறுகிறது.

இது குறித்து பல்கலைக் கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

யுனெஸ்கோ 2000ம் ஆண்டு பிப்ரவரி 21–ம் நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவித்தது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் அன்றைய நாளில் உலகத் தாய்மொழிநாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலத்தின் சார்பில் ‘உலகத் தாய்மொழி நாள் – பன்னாட்டு உரையரங்கம்’’ 21–ந் தேதி காலை 11 மணிக்கு நடத்தப்பட உள்ளது. இந்த உரையரங்கில் பல்வேறு நாடுகளில் இரந்தும் ஆசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பல்கலைக்கழக துணைவேந்தர் கோ. பார்த்தசாரதி தலைமை ஏற்கிறார். இலக்கியச் சொற்பொழிவாளர் பட்டேல் பா. பைரோஸ் அகமது சிறப்புரை நிகழ்த்துகிறார். உரையரங்களில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் ஜூம் செயலி அடையாள எண். 82351442312, பாஸ்வேர்ட்: tnousotcs என்ற இணைப்பின் வழி பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 9894621706 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *