சென்னை, ஜன. 12–
இன்னர் வீல் சென்னை மாவட்டம் 323ன் சார்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணி புரிந்து கொரோனா தொற்றை எதிர்த்து போராடி முறியடித்து வென்ற 1130 செவிலியர்களை கவுரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு உலோக பட்டயங்கள் கோப்பைகள், இனிப்பு பொட்டலங்களை சங்கத்தின் தலைவி வசுதா சந்திர சூட் வழங்கினார்.
டீன் டாக்டர் தரணிராஜன் ஜும் செயலி மூலமாக நடந்த இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து இன்னர் வீல் சங்கம் சென்னை 323 ன் தலைவரான உஷா சரகோஜிக்கு நன்றி தெரிவித்தார்.
சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணும் பொருட்டு செவிலியர்களுக்கு 1400 பிரத்யேக பாதுகாப்பு உபகரணங்களுக்காகவும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட 5000 குடி தண்ணீர் பாட்டில்களுக்காகவும் நன்றி தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும் இம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் நோயாளர்களின் வாழ்வை நேரம் காலம் பாராமல் தங்களின் கடின உழைப்பால் மீட்டெடுத்ததற்கு நன்றி என்று வசுதா சந்திர சூட் தெரிவித்தார். மேலும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை “அன்பின்சுவர்”அமைப்பிற்காக டீன் டாக்டர் தரணிராஜனிடம் வழங்கினார். இந்நிதி நோயாளிகளுக்கு மருத்துவமனையில் கிடைக்காத மருந்துகளை வெளியில் வாங்கிக் கொள்வதற்காக கொடுக்கும் நிதி ஆகும்.நோயாளிகளுக்கு அரசுவ அளவிடற்கரிய உதவிகள் செய்தாலும் இந்நிதி அவர்களுக்கு சிறிய அளவிலாவது உதவும் என்றார் அவர்.
சென்னை இன்னர் வீல் மாவட்டம் 323 ன் தலைவர் உஷா சரோகி ,மாவட்ட இன்னர் வீல் கிளப்புகளின் தலைவர்கள், நர்சிங் சூப்பரின்டெண்டன்ட் பரிமளா தேவி, சுஜாதா, கனகலட்சுமி, வனிதா ரதி மேலும் பலருக்கு டீன் மரியாதை செய்தார்.