வாழ்வியல்

இந்தியாவின் மிகப்பெரிய மூலிகைப் பண்ணை!

Spread the love

இன்று இந்தியாவில் ஒமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் என பல இந்திய மருத்துவ முறைகளை மக்கள் விரும்புகின்றனர். எனவே இந்திய அரசின் மருத்துவ முறைகளை, ஊக்குவிக்கும் வகையில், ஊட்டியில் எமரால்டு பகுதியில் 15 ஏக்கர் மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது தமிழ்நாடு அரசு. இங்கு 75 வகை இந்திய / வெளிநாட்டு மூலிகைகள் பயிர் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

இங்கு அரிய மூலிகைகள் வளர்கின்றனர். கண்புரை நோய்க்கு மருந்தான டஸ்டில்லர் (cyretria martima) மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் கம்பரே (Cympyttam appeciral) என்ற மூலிகையும் நாட்டிலேயே இங்கு மட்டும் கிடைக்கிறது. இவை வேறு எங்கும் விளையவில்லை.

இருதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண, மூலிகைகளில் இருந்து எடுக்கப்படும் “டி ஜாக்சின்’ மற்றும் டிஜிடாக்சின்’’ என்னும் ரசாயனப் பொருள் கொண்ட பாக்ஸ்கிளோவ் மூலிகையும், வெள்ளை தழும்புகளை கட்டுப்படுத்தும் லேடிஸ் லேஸ் என்ற மூலிகை பயிறும் இங்கு விளைவிக்கப்படுகிறது.

இந்த மூலிகைகள் ஐரோப்பாவை தாயகமாகக் கொண்டவை. மலேரியா காய்ச்சலை குணப்படுத்த கூடிய ஆர்ட்டிமிசியா என்ற சீன மூலிகையும் இங்கு உள்ளது. மலேரியா புழுக்களை அழிக்கும் மில்லி போலியம் என்னும் மூலிகையும் இங்கு வளர்க்கப்படுகிறது.

மேலும் நடுத்தர வயதை கடந்தவர்களுக்கு காதுகளில் ஏற்படும் நோயை குணப்படுத்தக் கூடிய லிவிங் பாசில் என்னும் சீனாவை தாயகமாக கொண்ட ஜிங்கோ பைலபா மூலிகையும் இங்கு வளர்க்கப்படுகிறது.

இங்கு பயிரிடப்படும் மூலிகைகள் ஹோமியோபதி துறை ஆய்வுக்கும், இதர இந்திய மருத்துவ துறைக்கும், இது தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மிக குறைந்த விலையில் விற்கப்படுகிறது. அரசின் இதர மருத்துவமுறை நிறுவனங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

ராஜன் தலைமை விஞ்ஞானி,

அரசு மூலிகை பண்ணை, ஆயுஷ் துறை, இந்திய அரசு, எமரால்டு, உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் www.india.gov.in/health and familywelfare.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *