செய்திகள்

இந்திய பொறியாளர் அமைப்பின் 124-வது கிளை: காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தில் தொடக்கம்

Spread the love

சென்னை, டிச. 4

இந்திய பொறியாளர் அமைப்பு தமிழகத்தில் 1920-ல் தொடங்கப்பட்டது. இதற்கு ஏற்கெனவே 123 கிளைகள் உள்ளன. 124வது கிளை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

விழாவில் பொறியாளர் அமைப்பின் தமிழ்நாடு பிரிவு தலைவர் ஆர்.ராமதாஸ் வரவேற்றார். இந்திய பொறியாளர் அமைப்பு தலைவர் டி.ஆர்.குணராஜா தலைமை வகித்து பேசும்போது, “இந்தியாவில் 15 மில்லியன் பொறியாளர்கள் உள்ளனர். உலக அளவில் இந்திய பொறியாளர்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. சமுதாய வளர்ச்சிக்கான பொறுப்பு பொறியாளர்கள் கையில் உள்ளது” என்றார்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசுகையில், “இந்தியா இன்று உலக அளவில் மாற்றத்தை உருவாக்கும் நாடாக உயர்ந்து வருகிறது. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக போட்டிபோடும் அளவுக்கு இந்திய பொறியாளர்களின் பங்கு இருக்க வேண்டும். திறன் நிறைந்த பொறியாளர்கள் அதிக அளவில் வரவேண்டும். 10, 12-ம் வகுப்பு படித்தவர்களும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் திறன் வளர்ப்பு அடிப்படையிலான பாடத்திட்டங்கள் வர வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில், காட்டாங்குளத்தூர் பொறியாளர் அமைப்புக்கான அங்கீகார சான்றை இந்திய பொறியாளர் அமைப்பின் செயலாளர் எஸ்.பட்டாச்சாரியா வழங்க அதை அமைப்பின் தலைவர் பி.டி.ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.

இதில் பொறியாளர் அமைப்பின் மாநில செயலாளர் பி.கோமதிநாயகம், எஸ்.ஆர்.எம். துணைவேந்தர் சந்திப் சன்சேத்தி, இணை துணைவேந்தர் டி.பி.கணேசன், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் சி.முத்தமிழ்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *