செய்திகள்

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் பவ்யா

வாஷிங்டன், பிப். 2–

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் செயல் தலைவராக பவ்யா லால் என்ற இந்திய வம்சாவளி பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் பல்வேறு உயர் பதவிகளை இந்திய வம்சாவளியினர் வகித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க குடியுரிமை பெற்ற பவ்யா லால், நாசா ஊழியர்களின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் நாசா அணியில் இவர் சேர்க்கப்பட்டுள்ளார். பொறியியல் மற்றும் விண்வெளி தொழில் நுட்பத்தில் சிறந்த பயிற்சி மிக்கவராக பவ்யாலாலை செயல் தலைவராக நியமித்து நாசா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பல பொறுப்புகளில் பவ்யா

அமெரிக்கா துணை அதிபராக ஜோ பைடன் இருந்த போது, பவ்யாலால் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், பவ்யாலால் விண்வெளி தொழில்நுட்பம் , தேசிய அறிவியல் அகாடமி , வணிக ரீதியான தொலைநிலை உணர்தலுக்கான தேசிய பெருங்கடல் வளிமண்டல நிர்வாக கூட்டாட்சி ஆலோசனை குழு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார்.

மேலும் நாசாவின் புதுமையான மேம்பட்ட திட்டம் மற்றும் நாசா ஆலோசனைக் குழுவின் தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, பொறியியல் ஆலோசனை குழுவின் வெளி கவுன்சில் உறுப்பினராக இருந்தார். எஸ்.டி.பி.ஐ.யில் சேருவதற்கு முன்பு, பவ்யாலால் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான சி-எஸ்.டி.பி.எஸ், எல்.எல்.சி-யின் தலைவராக இருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *