செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன் அடித்தது

ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித் 100 ரன்களை கடந்தனர்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி:

ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன் அடித்தது

சிட்னி, நவ. 27–

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன் எடுத்தது. அந்த அணியின் வீரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் 100 ரன்களை கடந்தனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் இன்று தொடங்கியது.

இந்தியா சார்பில் ஷிகர் தவான், மயங்க் அகர்வால், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச் – டேவிட் வார்னர் களம் இறங்கினர். அவர்கள் 2 பேரும் தொடக்கத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர்.

27 ஓவர் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பு ஏதுமின்றி149 ரன் எடுத்திருந்தது. 28வது ஓவரை ஷமி வீசினார். அப்போது அவரது பந்தை டேவிட் வார்னர் அடிக்க முயன்ற போது கே.எல். ராகுல் கேட்ச் பிடித்து டேவிட் வார்னரை (69 ரன்கள்) அவட்டாக்கினார். இதனால் ஆஸ்திரேலியா அணி முதல் விக்கெட்டை இழந்தது. இதைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் களம் இறங்கினார். அவருடன் சேர்ந்து ஆரோன் பின்ச் ரன்களை குவிக்கத் தொடங்கினார். 38வது ஓவரில் ஆரோன் பின்ச் 117 பந்துகளில் 101 ரன்களை கடந்து இந்த தொடரில் முதல் சதத்தை தொடங்கி வைத்தார். 39.6 ஓவரில் பும்ரா வீசிய பந்தை ஆரோன் பின்ச் (114 ரன்கள்) அடிக்க முயன்ற போது அதை கே.எல். ராகுல் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இதைத் தொடர்ந்து மார்க்கஸ் ஸ்டெய்ன்ஸ் களம் மிறங்கினார். 40.4 ஓவரில் ஷகல் வீசிய பந்தை அடிக்க முயன்ற ஸ்டெய்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் கே.எல். ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் களம் இறங்கினார். 44.5 வது ஓவரில் ஷமி வீசிய பந்தை அடிக்க முயன்ற மேக்ஸ்வெல் ஜடோஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன் பின் களமிறங்கிய மார்னஸ் 2 ரன்கள் எடுத்த நிலையில் நவ்தீப் சயினி வீசிய பந்தை அடிக்க முயன்ற போது ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதனைத் தொடர்ந்து அலெக்ஸ் கேரி களம் இறங்கினார். 49வது ஓவரில் 63 பந்துகளுக்கு 101 ரன் அடித்து ஸ்டீவன் ஸ்மித் அடித்தார். அதன் பின் 105 எடுத்த நிலையில் ஷிமி வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து பேட் கம்மின்ஸ் களம் இறங்கினார். நிர்ணயிக்கப்பட்ட 50வது ஓவரில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி பந்து வீச்சாளர் ஷமி 3 விக்கெட்கள் எடுத்தார். பும்ரா, நவ்தீப் சைனி, ஷகல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *