வர்த்தகம்

சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு மூளை நரம்பு பாதிப்பால் பக்கவாத நோய் அதிகரிப்பு

வீட்டிலிருந்து அதிக நேர வேலை செய்வதால்

சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு மூளை நரம்பு பாதிப்பால் பக்கவாத நோய் அதிகரிப்பு:

ஓ.எம். ஆர். அப்பல்லோவில் நவீன சிகிச்சை அறிமுகம்

சென்னை, நவ. 20

கொரோனா பெருந்தொற்றுநோய்க் காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவது அதிகரித்துள்ளது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை, 20 வயது முதல் 250-க்கும் மேற்பட்ட பக்கவாத நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்கி அவர்களைக் காப்பாற்றி உள்ளது.

பொதுவாக பக்கவாதம் என்பது மூளையின் ஒரு பகுதிக்கு ரத்தம் பாய்வது நிற்கும்போது ஏற்படுகிறது. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் இந்த குறுக்கீடு, சுற்றியுள்ள மூளை செல்கள் சேதம் அடைவதற்கு வழிவகுக்கிறது.

சென்னையைச் சேர்ந்த 34 வயதான மென்பொருள் பொறியாளரான சந்தோஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொடர்ந்து இடது கை இடது காலில் பலவீனத்தை உணர்ந்தார். மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ஓஎம்ஆ-ரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். இதன் நரம்பியல் நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் அவருக்கு சிகிச்சை அளித்து அவரை பரிசோதித்தார்.

நோயாளியின் மூளையை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தபோது மூளையின் வலது புறம் போதுமான ரத்த ஓட்டம் இல்லை என்பது, இரத்த ஓட்டம் குறைந்ததால் பல காயத் தழும்புகள் இருப்பதையும் கண்டறிய முடிந்தது.

பக்கவாதத்திற்கு மூளை பைபாஸ் அறுவை சிகிச்சை பொதுவாக செய்யப்படுவதில்லை. நோயாளியின் நிலையை கருத்தில் கொண்டு, சென்னை ஓஎம்ஆர் அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரூபேஷ்குமார், தலைமையிலான மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் குழு மூளை பைபாஸ் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. சருமத்திற்கு ரத்த ஓட்டம் வழங்கும் வழிகளில் ஒன்று மைக்ரோஸ்பிக் செயல்முறை மூலம் மூளைக்கு திருப்பி விடப்பட்டது. 5 மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதன் மூலம் வலது பக்க மூளைக்கு அதிக ரத்தம் கிடைத்தது என்று இதன் மூத்த நரம்பியல் ஆபரேஷன் நிபுணர் டாக்டர்ரூபேஷ் குமார் தெரிவித்தார்.

மூளைக்கு அதிக வேலை

டாக்டர் கார்த்திகேயன் மேலும் கூறுகையில்,“மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியம் அற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மூளை நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. இளைஞர்கள் 12 முதல் 14 மணிநேரங்களுக்கு மேல் வேலை செய்யும் நிலை உள்ளது. மேலும் இரவுப் பணி மற்றும் முறையற்ற தூக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மாறுபட்ட பணி நேரங்கள் உட்பட பல சிக்கலான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள். கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்பால், பணி செய்யும் இளைஞர்களின் மன அழுத்தம் அதிகரித்தது.

குறிப்பாக வேலை செய்யக் கூடிய பெண்கள், வீடு மற்றும் அலுவலகப் பணிகள் என இரண்டையும் நிர்வகிக்க வேண்டிய சிக்கல் அதிகரித்ததன் காரணமாக அவர்களின் மன அழுத்தம் மிகவும் அதிகரித்துள்ளது. மறுபுறம், இளைஞர்கள் சத்து இல்லாத ஜங்க் உணவுப் பழக்கம், புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம் போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் அவை அவர்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கின்றன என்றார்.

அப்பல்லோ மருத்துவமனைகளுக்கு வரக் கூடிய பெரும்பாலான நோயாளிகள் இந்த வகையில் வந்துள்ளனர். இளம் நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படுத்தும் முக்கிய ஆபத்து என்னவென்றால், அவர்களின் மூளை வேகமாக வீங்கும். பக்கவாத அறிகுறிகள் ஏற்பட்ட 4 மணிநேரத்திற்குள் பொன்னான நேரம் எனப்படும் அந்த முக்கியமான நேரத்திற்குள் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றார் டாக்டர் கார்த்திகேயன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *