காஞ்சீபுரம், டிச. 4 –
காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் வாலாஜாபாத் கிளை பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இப்போது இந்த வங்கிக்கு சொந்தமாக புதிய கட்டிடம் ரூ.34.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.
இதனுடைய திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக அர்ச்சகர்கள் கணபதி ஹோமம், வேத மந்திரங்கள் ஓதி பூஜை செய்தனர். பிறகு, கழக அமைப்பு செயலாளரும், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் இந்த புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
பிறகு அவர் பேசுகையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோரின் அறிவுரையின் பேரில், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்கள் மற்றும் தொழில் தொடங்க கடன்கள், சிறுவணிக கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களும் உடனுக்குடன் கடன்களை திருப்பி செலுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் எப்போதும் இந்த வங்கிக்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.
இவ்வங்கியின் கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான பி.லோகநாதன், முதன்மை வருவாய் அலுவலர் ஆர்.ஜெகன்சிங்ராஜன், பொது மேலாளர் ஜெ.விஜயகுமாரி, வாலாஜாபாத் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் காந்திதாசன், மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகி எஸ்.எஸ்.ஆர்.சத்தியா, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் நாயக்கன்குப்பம் என்.ஆர்.பழனி, ஒன்றிய செயலாளர்கள் அத்திவாக்கம் டாக்டர் செ.ரமேஷ், அக்ரி கே. நாகராஜன், அண்ணா தி.மு.க. நிர்வாகி கள் எம்.நரேந்திரன், ஒ.வி.ரவி, எஸ். வெள்ளேரியான், டி.சி.துரை, பிரபல ஒப்பந்ததாரர் என்.நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாலாஜாபாத்தில் இயங்கும் மத்திய கூட்டுறவு வங்கி மக்களுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.