வாழ்வியல்

பிரிட்டனில் முதல் சுற்றில் 1077 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டது

“பிரிட்டனில் முதல் சுற்றில் 1077 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. முதல் சுற்றின் முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் விதத்திலிருந்தாலும் கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாப்பாதற்கு இது போதுமானதா என இப்போதே கூற முடியாது. பெரும் திரளான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே இறுதி முடிவு தெரியவரும்” என்றும் ஆக்ஸ்ஃபோர்டு தெரிவித்திருந்தது.

இந்தியாவில் ஏற்கனவே கோவேக்ஸின் உள்ளிட்ட இந்திய தடுப்பு மருந்துகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் தற்போது பிரிட்டனில் உருவாக்கப்பட்ட தடுப்புமருந்தும் சோதனை செய்யப்படுகிறது.

இரண்டாம் கட்ட பரிசோதனை இந்தியாவில் புனே, டெல்லி எய்ம்ஸ், பீஹார், சண்டீகர் உள்ளிட்ட இடங்களிலும் தடுப்பூசி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பூசியை பரிசோதனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

இது குறித்து இந்திய சுகாதாரத்துறை செயலாளரின் செய்தியாளர் சந்திப்பின்போது பேசும்போது, இந்த விவகாரத்தில் முதல் கட்ட தகவல்கள் மட்டுமே பரிமாறப்பட்டுள்ளன என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *