வாழ்வியல்

வேளாண்மை ஆலோசனைக்கு ‘இப்கோ’ நிறுவன மொபைல் ஆப்!

Spread the love

விவசாய ஆலோசனைகளை பெற, மொபைல் போன் வாயிலாக வழங்கி வரும் ‘இன்டியன் பார்மர்ஸ் பெர்டிலைசர் கோ–ஆப்ரேட்டிவ் லிமிடெட்’ என்பதன் சுருக்கமான பெயர் இப்கோ என்பதாகும். இந்நிறுவனம், பலவகையான பிரிவுகள் அடங்கிய கூட்டுறவு அமைப்பாக, 1967ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உரம் தயாரித்து விற்பனை செய்வது, இதன் முதன்மை நோக்கமாகும். இதன் கீழ் 16 துணை நிறுவனங்கள் உள்ளன.

இந்த 16 துணை நிறுவனங்களுள் ஒன்று தான் ‘இப்கோ’ உழவர் தொலைத் தொடர்பு நிறுவனம். இதன் மூலமாக, இலவச வாய்வழிச் செய்தி ‘‘இப்கோ’’ கிராஸ் மொபைல் அப்ளிகேஷன் சேவை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

கால்நடை வளர்ப்பு, விளை பொருட்களின் சந்தை நிலவரம், சாகுபடி, மண் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, வானிலை முன்னறிவிப்பு, உடல் நலம், வேலைவாய்ப்பு, அரசு திட்டங்கள், மானியங்கள் ஆகிய தகவல்களை, தினமும் 2, 3 குரல் வழிச் செய்திகளை இலவசமாக வழங்குகிறது. கேட்க வேண்டிய செய்திகளை கேட்கவும், விவசாயம் மற்றும் கால்நடை தொடர்பான சந்தேகங்களுக்கு 534351 எண்ணிலும் அழைக்கலாம்.

ஆலோசனை

மொபைல் அப்ளிகேஷனில் வானிலை, எங்கர் நிபுணர் பகுதி, நூலகம், மண்டி விலை, சிறந்த நடைமுறை, விவசாய ஆலோசனை நிபுணர் ஆலோசனை போன்ற செய்திகள் வழங்கப்படுகின்றன. இதில் உள்ள தகவல்களை இந்தி, பெங்காலி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, மலையாளம், ஒரியா, தமிழ், குஜராத்தி, கன்னடம் போன்ற 11 மொழிகளில் படிக்கும் ஆடியோ வசதியுள்ளது.

இதில் நிபுணர் பகுதியில் சந்தேகங்களை நிபுணர்கள் குழுவுக்கு அனுப்ப முடியும். கேள்விகளை எழுத முடியாதவர்கள், பாதிக்கப்பட்ட பயிர்களை, கால்நடைகளை புகைப்படம் எடுத்து அனுப்பலாம். நிபுணர்கள் நீங்கள் அனுப்பிய புகைப்படத்திற்கான தீர்வை வழங்குவார்கள்.

மண்டிப் பகுதியில், ஒரே நேரத்தில் 5 விளை பொருட்களின் விலையை 5 மண்டிகளில் இருந்து பெற முடியும். விவசாயிகள் சந்தை விலை நிலையைப் பொறுத்து, தங்கள் பொருட்களை விற்பனை செய்ய முடிவு எடுக்கலாம். செய்திப் பகுதியில், கிராமப்புற இந்தியா, விவசாயம் தொடர்பான விஷயங்கள், சமூக நலம், வேலைவாய்ப்பு, மானியம், அரசு திட்டம் உட்பட செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்வது எப்படி?

இந்த பப்ளிகேஷனை, உங்கள் ஆன்ட்ராய்டு மொலைபில் ‘கூகுள் ப்ளே ஸ்டோர்’–ல் “IFFCO KISAN’’ என டைப் செய்து, பதிவிறக்கம் செய்து விருப்பமான மொழியைத் தேர்வு செய்யலாம்.

அவரது மொபைல் எண், மாவட்டம், தாலுக்கா, குறிப்பிட்டு my referralcode இடத்தில், 2201 என டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 534351 அல்லது 97917 35144 என்ற எண்ணில் பெறலாம். மேலும் விவரம் அறிய:

இஃப்கோ உழவர் தொலைத் தொடர்பு நிறுவனம், 91, தூய மேரி சாலை, அபிராமபுரம், சென்னை–600 018, போன்: 044 28346818, 28346419, www.iffco.in

இது இந்திய அரசின் விவசாய கூட்டுறவு உரத்தொழிற்சாலை ஆகும். இதுபோல் விவசாயம், தோட்டக்கலை, கூட்டுறவு, உரம் பற்றி அறிய விவசாயிகள் பார்க்க:

www.tn.horticulture.gov.in, www.tnau.ac.in/agritechl, www.india.gov.in/food and cooperation, www.india.gov.in/chemicals and fertilizers, www.spicltd.com, www.vanagam.com, www.tn.gov.in/cooperation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *