செய்திகள்

ஐ. சி. எல். பின்கார்ப் நிதி நிறுவனம் ரூ. 100 கோடிக்கு கடன் பத்திரங்கள் வெளியீடு

Spread the love

சென்னை, நவ.7 –

ஐ. சி. எல். பின்கார்ப் நிறுவனம் விரிவாக்கத் திட்டங்களுக்காக ரூ.100 கோடிக்கு கடன் பத்திரங்களை வெளியிடுகிறது.

தென்னிந்தியாவில் 155 கிளைகளுடன் நகை, பெண்களுக்கு ஸ்கூட்டர், வீடு, வாகன கடன்களை வழங்குகிறது. வெளிநாட்டிலிருந்து நிதி அனுப்பும், பெறும் வசதி, மருத்துவக் காப்பீடு வசதியை வழங்குகிறது என்றார் சேர்மன் அனில் குமார்.

இது சேலம், ஈரோட்டில் உள்ள முன்னணி நிதி நிறுவனத்தை ஏற்க உள்ளது. துபாயில் கிளை துவங்க துபாய் அரசு அனுமதி பெற்றுள்ளது. இதன் சிறப்பான செயல்பாடு காரணமாக இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் (2018–-19) 200% உயர்ந்துள்ளது.

தென் மாநிலத்தில் மட்டுமின்றி வட இந்தியாவிலும் இது விரிவாக்கம் செய்ய உள்ளது. 2022ம் ஆண்டில் தேசிய அளவில் 1000 கிளைகளுடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தலைமை நிதி அதிகாரி ஆர். சுப்பிரமணியன் விரிவாக்க திட்டங்களையும், நிதி முதலீடு விவரங்களையும் விவரித்தார். நிதி டைரக்டர் ரகு மோகன் கிளைகள் விரிவாக்கம் பற்றி விவரித்தார். உதவி மேலாளர் டி.ஜி. பாபு சென்னை மண்டல செயல்பாடுகளை விவரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *