வாழ்வியல்

5,300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பனி மனிதன் ஓட்ஸி!–2

Spread the love

இது பற்றி கருத்து தெரிவித்த கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பல்லுயிரின பெருக்க மையத்தின் அறிவியலாளர் கூறுகையில், பனி மனிதர் என அழைக்கப்படும் ஓட்ஸி, பனியில் இருந்து அகற்றப்பட்டபோது கிடைத்த 75 சதவீதத்திற்கு குறையாத உயிரினங்களால் ஆய்வுக்கான முக்கிய துப்புகள் கிடைத்தன.

பனி மனிதன் ஓட்ஸியை சுற்றியிருந்த பனிக்கட்டியிலும், அவரது ஆடையிலும், அவர் வைத்திருந்த கோலிலும் இருந்து, பெரும்பாலும் சிறிய துண்டுகளாக இவை மீட்கப்பட்டுள்ளன. பனி மனிதன் கடைசியாக பயணம் மேற்கொண்ட பாதையை தெளிவாக கண்டறிய கிடைத்திருக்கிற சில பாசிகள், மிகவும் முக்கியமானவை என்றும் அவர் கூறியுள்ளார்.

இனம் காணப்பட்டுள்ள பல பாசி வகைகள், கீழ் ஷ்னால்ஸ்டால் பள்ளத்தாக்கில் இன்று செழித்து வளருகின்றன. ஃபிலட் நெக்கெரா என்று அழைக்கப்படும் காட்டில் வளரும் முக்கியமான விதையில்லாத தாவரம், பனி மனிதரின் ஆடையில் அதிக அளவிலும், அவரது குடலில் நுண்ணிய துகள்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

செப்புக் காலத்தைச் சேர்ந்த பனி மனிதன் அருகிலுள்ள மற்ற பள்ளத்தாக்குகளில் ஏறி சென்றிருக்கலாம் என்பதை விட, தெற்கிலிருந்து வடக்காக ஷ்னால்ஸ்டாலுக்கு ஏறி சென்றிருக்கலாம் என்பதை காட்டுவதற்கு இந்த கண்டுபிடிப்பும், கீழுள்ளது முதல் மிதமான உயரத்தில் காணப்படும் ஒரே மாதிரியான பாசிகளும் சான்றுகளாக உள்ளன.

இன்று பிரபலமான பனி சறுக்கு விளையாட்டு தலமாக விளங்குகின்ற அந்த பள்ளத்தாக்கை, இந்த பனிமனிதன் சென்றிருக்கும் பாதையாக உறுதிப்படுத்தியுள்ள முந்தைய மகரந்தங்கள் கிடைக்கும் இடங்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வின் முடிவை இந்த கண்டுபிடிப்பின் முடிவு வலுப்படுத்துகிறது.

சுமார் 157 சென்டிமீட்டர் உயரம் இருந்ததாக கருதப்படும் பனிமனிதன் ஓட்ஸி, 50 கிலோஎடை உடையுடையவராக இருந்திருப்பார் என்று நம்பப்படுகிறது. கறுத்த, நீண்ட முடியையும், பழுப்பு நிறக் கண்களை கொண்டிருந்த அவர், தாடி வைத்திருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பனிமனிதன் ஓட்ஸி இறந்தபோது அவருக்கு வயது 45 ஆக இருந்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *