செய்திகள்

திருவில்லிபுத்தூரில் வருமான வரித்துறை சோதனை

Spread the love

திருவில்லிபுத்தூர், பிப்.14–

திருவில்லிபுத்தூரில் உள்ள பிரபல பால்கோவா கடைகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பால்கோவா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிரபல கடைகளில் வரி மோசடி நடப்பதாகப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன் அடிப்படையில் பாரம்பரியமிக்க கடைகளான திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள புளியமரத்தடி பால்கோவா கடை, ஆண்டாள் சன்னதியில் உள்ள வெங்கடேஸ்வரா பால்கோவா கடை ஆகிய கடைகளிலும் அதன் உரிமையாளர்களின் வீடுகளிலும் 25 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மாலை முதல் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

இதில் கணக்கில் காட்டப்படாத பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள், ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *