செய்திகள்

சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கை வரவு ரூ.1.10 கோடி

திருச்சி, மார்ச் 10–

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் பணம், 2.7 கிலோ தங்கம் ஆகியவை கிடைக்கப்பெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், நேர்த்திக்கடனாக பணம் மற்றும் தங்கம் உள்ளிட்டவற்றை செலுத்துவது வழக்கம். இவ்வாறு பக்தர்களால் கோயில் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம் 2 முறை திறக்கப்பட்டு, எண்ணப்பட்டு வருகிறது.

ரூ. 1 கோடி வரவு

இதன்படி, நேற்று சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, மலைகோட்டை கோயில் இணை ஆணையர் விஜயராணி, கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை கோவில் உதவி ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இந்த பணியில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஈடுபட்டனர்.

இதில் உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 10 லட்சத்து 93 ஆயிரத்து 541 ரூபாய் வசூலானது. மேலும், 2 கிலோ 730 கிராம் தங்கமும், 3 கிலோ 828 கிராம் வெள்ளி பொருட்களும், ஏராளமான வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *