வர்த்தகம்

உலகளவில் முதல் முறையாக வளரும் இளம் கலைஞர்களுக்கு கர்நாடக இசை, பரதம், வாத்தியக் கருவி இசையில் போட்டி

சென்னை, மார்ச் 1

கர்நாடக இசை மற்றும் பரத நாட்டியக் கலைஞர்களுக்கு நடத்தப்படும் சர்வதேச அளவிலான ஓர் போட்டி ஹங்கர் ரஷ் கர்நாடிக் ஹங்கமா. ஹங்கர் ரஷ் இந்தியா (பி) லிமிடெட் என்னும் நிறுவனம் சார்பில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், கொன்னக்கோல் மற்றும் தேவாரம், திவ்ய பிரந்தம், திருப்புகழ், பன்னிருதிருமுறை, ஹரிகதா, நாம சங்கீர்த்தனம், கீ போர்டு, கிதார், மாண்டலின், சாக்சபோன் இப்படி பல பிரிவுகளில் நடத்தப்படுகிறது. பரதநாட்டியப் போட்டியும் உண்டு.

15 வயது வரை, 15 வயதிலிருந்து 25 வயது வரை என்று 2 பிரிவுகளில் போட்டி நடத்தப்படும். ஹங்கர் ரஷ் கர்நாடிக் ஹங்கமா ‘பேஸ்புக்’ பக்கத்தில் கூகுல் விண்ணப்பம் கிடைக்கும்.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்கள் வெளிநாட்டில் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு பெறுவார்கள். முதல் பரிசு 10,000, 2ம் பரிசு 5,000, 3ம் பரிசு 2,000, ஆறுதல் பரிசு ரூ.1000. சர்பிடிகேட்டும் உண்டு. ரொக்கப் பரிசுகளும் உண்டு. இறுதிச் சுற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு விசேஷ பரிசுகள் உண்டு.

நுழைவுக் கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31. உலகில் எந்த மூலையில் இருப்பவர்ளும் விண்ணப்பிக்கலாம்.

பிரச்சார பாரதியிடமிருந்து ‘B’ கிரேடு அல்லது அதற்கு மேல் தகுதி பெற்ற வர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். கண்ணியமான உடை அணிந்து போட்டியில் பங்கேற்க வேண்டும்.

உங்கள் கனவை நனவாக்க போட்டியில் பங்கெடுங்கள். திறமையைக் காட்டுங்கள். வெற்றி பெறுங்கள். வெளிநாட்டுக்கு பறந்து நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பைப் பெறுங்கள். உங்களில் பாலமுரளி கிருஷ்ணாவும் இருக்கலாம். எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் இருக்கலாம் அமைப்பின் தலைவர் ஒருங்கிணைப்பாளர் பாகீரதி ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். ஏற்பாடுகளில் துணைத் தலைவரும் இன்னொரு ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் ஹரிணி ஸ்ரீவத்சா, சிந்துஜா சந்திரமவுலி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கொண்டு தகவலுக்கு : https://bit.ly/3qVCUMc, https://bit.ly/3aV9bgU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *