வர்த்தகம்

ஹங்கமா சார்பில் சலீம் சுலைமான் பாடலுடன் கார் ரேஸ் விளையாட்டு அறிமுகம்

சென்னை, அக். 23

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பொழுதுபோக்கு நிறுவனமான ஹங்கமா, சலீம் சுலைமான் இசையமைத்த ‘பீச் ராஸ்தே’ பாடலுக்கு புதிய கார் ரேசிங்க் விளையாட்டை அறிமுகப்படுத்தியது. இந்த பாட்டின் இசை காணொலியில் அறிமுகமாகும் அடி மற்றும் அடா ஆகிய இரு கார்ட்டூன் கதாபாத்திரங்கள் குதூகலமூட்டும் சுவாரஸ்யமான விளையாட்டாகும். இதை விளையாடுவோர் பல்வேறு கார் ரேசிங்க் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவதுடன் சலீம் சுலைமான் ஹிட் டிராக்கையும் கேட்டு மகிழலாம்.

இந்த விளையாட்டை ஆட பயனீட்டாளர் 54646 என்னும் எண்ணுக்கு பீச் என்று குறுஞ் செய்தி அனுப்ப வேண்டும். மேலும் இந்த விளையாட்டை ஹங்கமா கேம்ஸ் தளத்திலும் ஆடி மகிழலாம்.

இந்தத் தளத்தில் விளையாட்டில் புதிர்களும் உண்டு. ஹங்கம்மா கேம்ஸ் ஜோனில் விளையாட பயனீட்டாளர் https://bit.ly/344YUw வலைதளத்துக்குச் செல்ல வேண்டும். சந்தாதாரர்களும் 54646 எண்ணுக்கு பீச் என்று குறுஞ்செய்தி அனுப்பி விளையாட்டை ஆடலாம் என்று ஹங்கமா டிஜிட்டல் மீடியா தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.

இசை மேஸ்ட்ரோக்களான சலீம் மற்றும் சுலைமான் மெர்சன்ட் ஆகியோர் இந்திய இசைச் சூழலை மாற்றும் வகையில் புதிய மற்றும் வித்தியாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். மெர்சன்ட் ரிக்கார்ட்ஸ் என்னும் இந்த புதிய ரிக்கார்ட் லேபிள் – இளம் இசைக் கலைஞர்கள், திறமையான இசை அமைப்பாளர்கள், வளரும் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் ஆற்றல் மற்றும் திறமையைப் வெளிப்படுத்த தளம் அமைத்துத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *