வாழ்வியல்

வயிற்று வலி, விலா வலி, வாந்தி, சிறுநீர்க்கடுப்பு ஆகியவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி?

கோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய ஒரு முக்கியத் தொந்தரவு, சிறுநீர்க் கல். இதனால் ஏற்படும் வயிற்று வலி, விலா வலி, வாந்தி, சிறுநீர்க்கடுப்பு ரொம்பவே படுத்திவிடும்.

கோடையில் தண்ணீர் தாகத்தைக் கட்டுப்படுத்த நாம் உடனடியாகத் தேடிச்செல்வது சோடா மற்றும் கோலா கலந்த மென்பானங்களைத்தான். இவற்றில் பாஸ்பாரிக் அமிலம் அபரிமிதமாக உள்ளது. இவற்றை அடிக்கடி அருந்துபவர்களுக்குச் சிறுநீர்க் கற்கள் புதிதாகவும் வரலாம்; ஏற்கெனவே இந்தப் பிரச்சினை உள்ளவர்களுக்குக் கோடையில் அதிகம் தொல்லை தரலாம்.

ஆகவே மென்பானங்களுக்கு விடை கொடுங்கள். தாகத்தைத் தணிக்க நிறைய தண்ணீர் குடித்தாலே போதும். கூடுதல் தேவைக்கு இளநீர், நன்னாரி சர்பத், எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சுச் சாறு, திராட்சைச் சாறு, அன்னாசி, பானகம், பதநீர், நுங்கு, தர்பூசணியைப் பயன்படுத்தலாம். செயற்கைப் பழச்சாறுகள் பக்கமும் தலைவைக்க வேண்டாம்!

-டாக்டர் கு. கணேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *