உலக சுகாதார நிறுவனமும் உலக நாடுகளும் ஏற்றுக்கொண்ட ஒரு மருத்துவ முறை ஹோமியோபதி.
உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு நிரூபணம் செய்யப்பட்டுள்ள ஹோமியோபதி மருத்துவ முறை கோடிக்கணக்கான மக்களால் வரவேற்கப்படுகிறது. அதன் சிறப்புகளைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்
இன்றைய விஞ்ஞானத்தைத் தீர்மானிக்கும் ஒற்றைச் சக்தியாக நாம் ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம்.
ஆங்கில மருத்துவத்திற்கு எதிராகப் பேசும் எந்த ஒரு முறையையும் ‘அறிவியல் பூர்வமானது இல்லை’ என்ற நம் பொதுஅறிவில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் கருத்தால் மற்ற மருத்துவ முறைகளைப் புறந்தள்ளுகிறோம்.
இம்மருத்துவ முறை கடந்த இருநூறு ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. விஞ்ஞான வளர்ச்சியின் உச்ச கட்டம் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிற இந்த நூற்றாண்டில் கூட ஹோமியோபதி மருந்துகளில் என்ன இருக்கிறது என்பதை எந்த கருவியாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஹோமியோபதி அறிவியல் பூர்வமற்றது என்று கூறவும் வழியில்லை. ஏனென்றால் அம்மருந்துகளின் ஆற்றல் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.