வர்த்தகம்

ஹீரோ பைக், ஸ்கூட்டர் விற்பனை உலக சாதனை: 5 ஆண்டுகளில் 10 புதிய வாகன அறிமுகம் திட்டம்

சென்னை, பிப். 25–

ஹீரோ பைக், ஸ்கூட்டர் தயாரிக்கும் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 10 புதிய ரக பைக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது. இவை பெட்ரோல் சிக்கன, சொகுசு வசதி கொண்ட வாகனங்களாக மக்களை கவரும் என்று இதன் விற்பனை பிரிவு தலைவர் நவின் சவுகான் தெரிவித்தார்.

உலகில் அதிக மோட்டார் சைக்கிள் உற்பத்தி செய்யும் ஹீரோ மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் இதுவரை மொத்தமாக 10 கோடி பைக், ஸ்கூட்டர் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. 29 ஆண்டுகளில் 50 கோடி விற்பனையை எட்டியது. அடுத்த 7 ஆண்டுகளில் மொத்தம் 100 கோடியை எட்டியுள்ளது. உலக தரத்தில் சிறந்த பெட்ரோல் சிக்கன பைக்காக, சொகுசு வசதிகளுடன் ஹீரோ பைக், ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வாடிக்கையாளர் பாராட்டை பெற்றது என்று விற்பனை பிரிவு தலைவர் நவின் சவுகான் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் உலகின் அதிக விற்பனையாகும் பைக் என ஹீரோ தொடர்ந்து பெயர் பெற்றுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 10 புதிய ரக பைக்குகளை பிரிமியம் ரக ஸ்கூட்டர், அதிக சக்தி திறன் பைக் என அறிமுகம் செய்து விற்பனையில் சாதனை பெற உள்ளோம் என்றார்.

நாட்டில் விற்கப்படும் ஒவ்வொரு 2 பைக்கில் ஒன்றாக ஹீரோ பைக்காக உள்ளது. வாடிக்கையாளர் பட்ஜெட்டுக்கு ஏற்ப வெவ்வேறு ரகங்கள் உள்ளன. இதன் ஸ்பிளெண்டர் பைக் ஆண்டுக்கு 20 லட்சம் விற்பனையாகிறது.

இளைஞர்களுக்கு எக்ஸ்–பல்ஸ், எக்ஸ்– டிரீம் அறிமுகம் செய்து வரவேற்பு பெற்றது. ஸ்கூட்டரில் மேஸ்ட்ரோ, எட்ஜ், டெஸ்டினி ஸ்கூட்டர்கள் சிறப்பாக செயல்படுகிறது. நவீன சுற்றுச்சூழல் தொழில் நுட்பத்தில் எக்ஸ் – சென்ஸ் செயல்படுகிறது. எங்கள் பைக்கிள் பாதி கிராமப்புற மக்களுக்கு விற்பனையாகிறது. கொரோனா காலத்திலும் அக்டோபர் 2020 மாதத்தில் 8.06 லட்சம் பைக், ஸ்ட்ர் விற்பனை செய்து சாதனை படைத்தோம் என்றார் அவர்.

ஹீரோ மோட்டார் கார்ப் இதன் சேர்மன் பவன் முஞ்சால் தலைமையில், கொரோனா காலத்திலும் புதிய டீலர்களை நியமித்து, வாடிக்கையாளர் எளிதில் பைக், ஸ்கூட்டர் வாங்க வசதி செய்து கொடுத்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *