வாழ்வியல்

அழகர்கோவில் மலையில் பக்குவப்படுத்தப்பட்ட மூலிகைகள் நோய் தீர்க்கும் மருந்தாக வனத்துறை சார்பில் விற்பனை

மூலிகைகளை பாதுகாக்கவும் அதற்கே உரித்தான இயற்கை சூழலில் வளர்க்கவும் தமிழக, கேரள, கர்நாடக வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டது. இதற்காக, பெங்களூருவில் உள்ள “டானிடா’ எனப்படும் “பாரம்பரிய மருத்துவ மரபுகள் மறுமலர்ச்சி அறப்பேரவை’ (எப்.ஆர்.எல்.எச்.டி.,) உதவியுடன் மூன்று மாநிலங்களிலும் மூலிகைகளை வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது

மூலிகை எங்கு வளரும்: கலப்பு வகை மரஞ்செடிகளுடைய வறண்ட வனத்தில் மூலிகை வளரும். இதன்படி தமிழகத்தில் பேச்சிப்பாறை, முண்டந்துறை, குற்றாலம், தானிப்பாறை, அழகர்கோவில், கொடைக்கானல், கோடிக்கரை, டாப்சிலிப், கொள்ளிமலை, குரும்பரம், தென்மலை, கேரளாவில் அகத்தியர்மலை, திரிவேணி, இரவிகுளம், பீச்சி, அதிரப்பள்ளி, சைலன்ட்வேலி, வயநாடு, கர்நாடகாவில் தலைக்காவேரி, சரவணதுர்க்கா, சுப்பிரமணியா டெம்பிள், சார்மாடி, தேவராயனதுர்கா, குத்ரேமுக், கெம்மனங்முண்டி, ஆகும்பே, தேவிமனே, சாந்தூர், கற்பகபள்ளி ஆகிய வனப்பகுதிகள் மூலிகைகள் வளரும் இடமாக தேர்வு செய்யப்பட்டன.

முதல் மூலிகை வனம்:

இம்மூன்று மாநிலங்களில் மிக சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வரும் காடுகளில் அமைக்கப்பட்ட 30 மூலிகை வனத்தொடரில் அழகர் கோவில் மலையும் ஒன்று. இங்கு முதல்முறையாக 1993-04ம் ஆண்டு திட்டப்படி, 185 எக்டேர் வனப்பரப்பில் முதல் “மூலிகை வனம்’ கடந்த 1995 நவ., 28ல் திறக்கப்பட்டது.

அழகர்கோவில் வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் இந்த மூலிகை வனம் கண்காணிக்கப்படுகிறது. டானிடா மற்றும் மூலிகை வனக்குழுவால் மூலிகை வனம் பாதுகாக்கப்படுகிறது. மூலிகைகள் அதற்கே உரித்தான இயற்கை சூழலில் வளர்க்கப்படுகிறது. நன்கு வளர்ந்து பக்குவப்படுத்தப்பட்ட மூலிகைகள் நோய் தீர்க்கும் மருந்தாக வனத்துறை சார்பில் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *