செய்திகள்

மோசமான வானிலையால் திருப்பத்தூர் அருகே வயல்வௌியில் தரை இறங்கிய ஹெலிகாப்டர்

வேலூர், அக்.18–

திருப்பத்தூர் பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக தனியார் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக வயல்வௌியில் தரையிறக்கப்பட்டது.

கோவையை சேர்ந்த நகைக்கடை அதிபர் சீனிவாசன் என்பவர், தனது குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்கு தனியார் ஹெலிகாப்டர் மூலம் சென்றுள்ளார். ஹெலிகாப்டரில் 2 பைலட்கள் உட்பட 7 பேர் சென்றுள்னர். இந்நிலையில் இன்று காலை திருப்பத்தூர் அருகே

சென்றபோது அங்கு கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் பாதை தெரியாததால் விமானி திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி பிரதான சாலை அருகே கந்திலி என்ற இடத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கியுள்ளார். இதில், பைலட் மற்றும் பயணிகள் பத்திரமாக தரையிறங்கினர்.

இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல் விசாரணை மேற்கொண்டார். அப்போது, வானிலை சீரடைந்ததும் கிளம்பி சென்றுவிடுவதாக சீனிவாசன் தெரிவித்தார். இதனையடுத்து சிறிதுநேரத்திற்கு பின்னர், ஹெலிகாப்டரில் அவர்கள் புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *