செய்திகள்

வீடுகளில் சூழ்ந்த வௌ்ளம்: பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றம்

ஐதராபாத்தில் கொட்டித் தீர்த்த கன மழை

வீடுகளில் சூழ்ந்த வௌ்ளம்: பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றம்

ஐதராபாத், அக்.18–

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நேற்று மாலை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனையடுத்து ஐதராபாத் நகரில் தாழ்வான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் கனமழை கொட்டியதால் சாலைகளில் மழைவெள்ளம் பாய்ந்தோடியது. ஐதராபாத் நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. ராணுவத்தினர் பல இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று பெய்த மழையில் தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது. அப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இது தொடர்பாக ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அன்ஜனி குமார் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ பதிவில், ஹபீஸ் பாபா நகர், பூல்பாக், ஒமர் காலனி, இந்திரா நகர், சிவாஜிநகர், ராஜீவ் நகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தெலுங்கானாவின் மல்காஜ்கிரி மாவட்டத்தில் நேற்று 15 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மழைவெள்ள மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

தெலுங்கானாவில் மழைவெள்ளத்துக்கு இதுவரை மொத்தம் 79 பேர் பலியாகி உள்ளனர்.

மழைவெள்ள சேதம் குறித்து தெலுங்கானா அரசு மதிப்பிட்டு வருகிறது. பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரை சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *