போஸ்டர் செய்தி

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு

Spread the love

சென்னை,டிச.3–

தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மழை தொடரும் என்று அவர் தெரிவித்தார்.கனமழையின் காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை வலுவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரும்பாலான மாவட்டங்களில் அதாவது 17 மாவட்டங்களில் கனமழை பதிவாகி உள்ளது. 3 மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கனமழையால் பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலுர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதாசலம் கல்வி மாவட்டத்தில் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, பெரம்பலூர், சேலம், நெல்லை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் புதுக்கோட்டையில் ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி, மீமிசல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் சோழிங்கநல்லூர், துரைப்பபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. செங்கல்பட்டு பெருங்களத்தூர், வண்டலுரிலும் கனமழை பெய்தது. தமிழகத்தில் இன்றும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

சேலத்தில் கோரிமேடு, கன்னங்குறிச்சி, ஏற்காடு பகுதிகளில் மிதமான மழை பெய்தது புதுக்கோட்டையில் ஆலங்குடி, கறம்பக்குடி, மணல்மேடு, அவுடையார், அரசர்குளம் பகுதிகளில் மழை பெய்தது விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, பகுதிகளில் மழை பெய்தது

திருவண்ணாமலையில், போளூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் , நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், களக்காடு, பணகுடி, காவல்கிணறு, திசையன்விலை, ராதாபுரம் பகுதிகளில் மழை பெய்தது. நெல்லை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பரவலாக மழை பெய்தது ராமநாதபுரத்தில், அதிகபட்சமாக 9 செ.மீ., ராமேஸ்வரத்தில் 8 செ.மீ., தேவிப்பட்டினத்தில் 7 செ.மீ., மழை பதிவாகியது.

இந்தநிலையில் தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தமிழகத்தில் குன்னூரில் 13 செ.மீ.,ராமநாதபுரம், கேத்தி, குந்த பிரிட்ஜ், அகரம் சீகூர் ஆகிய இடங்களில் 9 செ.மீ., தரங்கம்பாடி, அணைக்காரன்சந்திரன், ராமேஸ்வரம், சீர்காழி, அண்ணாமலைநகர் 8 செ.மீ., கோத்தகிரி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, ஆர்.எஸ்.மங்களம், திருவாடானை, தொண்டி 7 செ.மீ., சேத்தியாதோப்பு 6 செ.மீ., ஸ்ரீமுஷ்ணம், முதுகுளத்தூர், சிதம்பரம், அம்பாசமுத்திரம், மணமேல்குடி, குடவாசல், தொழுதூர், வேம்பாவூர் 5 செ.மீ.,மழை பெய்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் பல இடங்களில் 4 செ.மீ.,3 செ.மீ., 2 செ.மீ., 1 செ.மீ.,மழை பதிவாகியுள்ளது.

கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

7 மாவட்டங்களுக்கு விடுமுறை

மழை காரணமாக, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை,அரியலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *