செய்திகள் முழு தகவல்

நீரிழிவு நோய்‌ தடுக்க ஹெல்த் பாஸ்போர்ட் !

நீரிழிவு நோய்‌ வேகமாக அதிகரித்து வருவது பெரும்பாலான மக்களின்‌ வாழ்வை உடல் ரீதியாகவும்‌ நிதி ரீதியாகவும்‌ பாதிக்கிறது. தீவிரமாகப்‌ பரவும்‌ நோய்த்தொற்றையும்‌ அதனுடன்‌ சேர்த்துக்கொள்ள வேண்டிய நிலைமையில்‌ இருக்கிறோம்‌. காரணம்‌, ஏற்கனவே நீரிழிவு இருக்கும்‌ நோயாளிகள்‌ எளிதில்‌ கோவிட்‌-19 வைரஸ்‌ தாக்குதலுக்கு உட்படூவது அதிகரித்துள்ளது. நீரிழிவு நோயாளிகளிடத்தில்‌ இந்த வைரஸ்‌ தொற்று பரவும்போது ஏற்கனவே இருக்கும்‌ நீரிழிவு சிக்கல்களால்‌ ரத்தத்தில்‌ இருக்கும்‌ குளுக்கோஸ்‌ அளவு மாறுபட்டு, அவர்களுக்குச்‌ சிகிச்சையளிப்பது கடினமாகும்‌ வாய்ப்பு உருவாகிறது. ‘சத்தமில்லா கொலையாளி’ சைலண்ட்‌ கில்லர்‌ (Silent Killer) என்றழைக்கப்படும்‌ இந்த நோய்‌ தற்போது 20-கள்‌ மற்றும்‌ 30-களில்‌ இருக்கும்‌ இளைய தலைமுறையினரையும்‌ பாதிக்கத்‌ தொடங்கியுள்ளது. தற்போது, இந்தியாவில்‌ 77 மில்லியன்‌ நீரிழிவு நோயாளிகள்‌ உள்ளனர்‌. உலக சுகாதார நிறுவனத்தின்‌ கணிப்பின்படி, 2030-ல்‌ இந்த அளவு 45% வரை அதிகரித்து 101 மில்லியனாக இருக்குமென்று கணக்கிடப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல்‌ கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவிலுள்ள குழந்தைகளிடத்தில்‌ அதிக எண்ணிக்கையில்‌ டைப்‌-। டயபடீஸ்‌ மெலிடஸ்‌ (Type 1 Diabetes Mellitus) எனும்‌ நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. ஒழுங்காக உடற்பயிற்சிகள்‌ மேற்கொள்ளாததும்‌, ஆரோக்கியமற்ற உணவுப்‌ பழக்கங்களுமே இதற்குக்‌ காரணம்‌. கடந்த இருபது ஆண்டுகளுக்கும்‌ மேலாக, இந்தியாவில்‌ குழந்தைகள்‌ நீரிழிவால்‌ பாதிக்கப்படும்‌ என்னிக்கை ஆண்டுதோறும்‌ 3 முதல்‌ 5% ஆக இருக்கிறது. குழந்தைகளுக்கும்‌ நீரிழிவு ஏற்படுமென்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடம்‌ குறைவாகவே உள்ளது. சரியான நேரத்தில்‌ நோயறிதல்‌ மற்றும்‌ நீரிழிவை நிர்வகித்தல்‌ ஆகியவற்றுடன்‌ இருக்கும்‌ சவால்களையும் கருத்தில்கொள்ளும்போது, இந்த ஆபத்தான நோயை எதிர்த்துப்‌ போராவதற்குத்‌ தேவையான அனைத்து எச்சரிக்கை நடவடிக்கைகளையும்‌ மேற்கொள்வதை உறுதிப்படுத்துவது மிக முக்கியமானதாக உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக்‌ கட்டாயமாகப்‌ பின்பற்றினாலும்‌, பரம்பரையாக அல்லது மரபணு நிலைமைகளால்‌ நிறைய நபர்களுக்கு நீரிழிவு நோய்‌ ஏற்படுகிறது.

ஒருவர்‌ உணவுக்‌ கட்டுப்பாடு மற்றும்‌ உடற்பயிற்சியை ஒழுங்காகப்‌ பின்பற்றுவதைத்‌ தவிர்த்து, விரிவான சுகாதாரக்‌ காப்பீட்டுத்‌ திட்டமும்‌ எளிதாக இருக்கும்‌. நீரிழிவு மேலாண்மையில்‌ பயனளிக்கும்‌ அடுத்த படி இதுவாகும்‌. வாடிக்கையாளர்கள்‌ ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளவும்‌, சில ஆண்டுகளாகத்‌ தொடர்ந்துவரும்‌ நீரிழிவு, உயர்‌ ரத்த அழுத்தம்‌ போன்ற நாட்பட்ட நோய்களை எதிர்கொள்ளவும்‌ உதவும்‌ வகையில்‌ சிறப்பு ஆரோக்கியம்‌ மற்றும்‌ சூழல்‌ மேலாண்மை திட்டத்தைச்‌ சில காப்பீட்டு நிறுவனங்கள்‌ வழங்குகின்றன. இந்த திட்டங்கள்‌ மூலமாக, ஆரோக்கிய சரிபார்ப்பு மற்றும்‌ குறிப்பிட்ட இலக்குடன்‌ ஆன்லைனில்‌ மேற்கொள்ளப்படும்‌ சுகாதார மதிப்பீடு, மேம்பாட்டு நடவடிக்கைகள்‌ வழியாக வாடிக்கையாளர்கள்‌ தங்களது உடல்நிலையைப்‌ புரிந்துகொள்ள காப்பீட்டு நிறுவனங்கள்‌ உதவுகின்றன. சில சுகாதார நிறுவனங்கள்‌ சுகாதாரம்‌ தொடர்பான முடிவுகளை நிர்வகிப்பதில்‌ தலையிடுகின்றன, தங்களது உறுப்பினர்கள்‌ ஒரு நிபந்தனையுடன்‌ வாழ உதவுகின்றன.

மேலும்‌, இத்திட்டத்தின்‌ ஒரு பகுதியாக திறன்மிக்க சுகாதாரப்‌ பயிற்சியாளர்களின்‌ உதவியுடன்‌ வாடிக்கையாளர்களின்‌ உடல்நலம் மதிப்பிடப்படுகிறது. சிறப்பு சுகாதார ஆபத்து மதிப்பீட்டு கருவியுடன்‌ இணைந்த சோதனை முடிவுகளுடன்‌ இந்த மதிப்பீடு செய்யப்படும்‌. வாடிக்கையாளர்கள்‌ தங்களால்‌ என்ன சாதிக்க முடியுமென்று உணர்கிறார்களோ, அதனை அடிப்படையாகக்‌ கொண்டு இலக்குகளை முடிவுகள்‌ நிர்ணயிக்கின்றன. இதனைத்‌ தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு ஹெல்த்‌ பாஸ்போர்ட்‌’ (எம்‌ ஈர என்ற பெயரில்‌ சுகாதார மதிப்பெண்‌ வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள்‌ நிர்ணயித்த இலக்குகளை அடிப்படையாகக்‌ கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட உணவு மற்றும்‌ வாழ்க்கைமுறை செயல்பாட்டு திட்டம்‌ இதில்‌ அடங்கும்‌. அது மட்டுமல்லாமல்‌, தனிப்பட்ட சமையல்‌ குறிப்புகள்‌, சுகாதார அஞ்சலர்கள்‌, ஒழுங்கான பாலோ-அப்கள்‌ மற்றும்‌ நினைவூட்டல்கள்‌ இந்த திட்டம்‌ மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும்‌. ரத்தத்தில்‌ சர்க்கரை அளவு மற்றும்‌ ரத்த அழுத்தம்‌ குறைதல்‌, மருந்துகளைப்‌ பின்பற்றுதல்‌ போன்றவை மூலமாக அவர்களது உடல்நலத்தில்‌ ஏற்படும்‌ முன்னேற்றம்‌ அளவிடப்படும்‌. எது என்னவானாலும்‌, இந்த சுகாதாரத்‌ திட்டத்தின்‌ சிறப்பான பகுதி என்பது வாடிக்கையாளர்கள்‌ பெறும்‌ பங்கேற்பு புள்ளிகள்தான்‌. இவை, அவர்களது பிரீமியம்களை குறைக்கின்றன அல்லது அவர்களது பலன்களை அதிகரிக்கின்றன. இவ்வாறு பல்வேறு சுகாதாரப்‌ பிரச்சனைகளை உள்ளடக்கிய விரிவான சுகாதாரக்‌ காப்பீட்டு பாலிசியை வாங்குவதே புத்திசாலித்தனமானது. இது ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள உதவும்‌.

ஒழுங்காக உடற்பயிற்சி செய்வது, சத்தான உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றுவது, ஒரு நல்ல சுகாதாரக்‌ காப்பீட்டு பாலிசியில்‌ முதலீடூ செய்வதன்‌ மூலமாக, உலக நீரிழிவு தினத்தில்‌ இந்த சைலண்ட்‌ கில்லரு’க்கு எதிராக நாம்‌ அனைவரும்‌ ஒன்றிணைந்து தீர்வு காண்போம்‌. நல்ல சுகாதார காப்பீட்டு பாலிசி என்பது அவசரகாலத்தில்‌ நமது சேமிப்புகள்‌ கரைந்துபோகாமல்‌ காப்பதற்காக மட்டுமல்ல, நாம்‌ ஒரு ஆரோக்கியமான, முற்றிலும்‌ நிறைவான வாழ்வை மேற்கொள்ளவும்‌ இவை வழி செய்யும்‌. அனைத்துக்கும்‌ மேலாக, ஆரோக்கியம்‌ இருந்தால்தான்‌ வாழ்க்கை இருக்கும்‌! (Health Hai Toh Life Hai)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *