செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

புதுடெல்லி, பிப்.2–

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

கொரோனா தடுப்பூசி திட்டத்தின்படி 60 வயதை கடந்தவர்களுக்கும், இணை நோய்களை கொண்ட 45 வயதை தாண்டியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. டெல்லியில், பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். அதேபோல சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். 20 நிமிட கண்காணிப்புக்கு பிறகு டீன் ஜெயந்தி மற்றும் செவிலியர் மாலதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துவிட்டு இருவரும் புறப்பட்டு சென்றனர்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், அம்மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

அமித்ஷா

டெல்லியில் உள்ள மெடண்டா மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமித்ஷா இதே மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தடுப்பூசி போட்டுக்கொண்டார். நேற்று அவருக்கு பிறந்தநாள் ஆகும். பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் மையத்துக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

ஒடிசா மாநில முதலமைச்சரும், பிஜு ஜனதாதள தலைவருமான நவீன் பட்நாயக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். 74 வயதான அவர், சட்டசபை வளாகத்தில் உள்ள சிகிச்சை மையத்துக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். அந்த புகைப்படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

டாக்டர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி ஹார்ட் அண்ட் நுரையீரல் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அவரது மனைவியுடன் வந்து போட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *