செய்திகள் வர்த்தகம்

இளைஞர்களுக்கான சுகாதாரக் காப்பீடு: ‘சிக்னா ஹெல்த் ’ இன்சூரன்ஸ் தலைமை அலுவலர் ஷஷாங் சபேகர் அறிவுறுத்தல்

சென்னை, ஜன. 12–

இளைஞர்களுக்கான சுகாதாரக் காப்பீட்டின் முக்கியத்துவத்தை மணிபாலில் உள்ள சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனியின் தலைமை வினியோக அலுவலர் ஷஷாங் சபேகர் அறிவுறுத்தியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கொரோனா நோய் தொற்று காலத்தில், மக்கள் தங்களது ஆரோக்கியம் மற்றும் நீண்டகால நிதிப் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பற்று உணர்ந்ததைப் பார்த்திருக்கிறோம். விளையாட்டின் மூலம் இளைஞர்கள் மன உறுதியையும் உடல் திறனையும் பெற, நாம் தயாராக இருக்கிறோமா? ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சரியான தரத்தில் உணவையும் நல்ல ஆரோக்கியத்தையும் கொடுத்திருக்கிறோமா? ஆரோக்கியத்தை வேறுபட்ட கண்ணோட்டத்துடன் அணுக வேண்டிய நேரம் இது.

சுகாதாரக் காப்பீட்டு பாதுகாப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளைக் கவனித்து, அபாயத்தை சரிசெய்யும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது, எதிர்பாராத தருணங்களுக்கான சுகாதாரக் காப்பீட்டு திட்டங்கள், வரி சேமிப்பு விருப்பங்கள் ஆகியன இந்த கல்வி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அதோடு, இது செயல்முறை மற்றும் யதார்த்த வாழ்வில் கண்டிப்பாகத் தாக்கம் செலுத்த வேண்டும். அப்போது தான், உற்பத்தி மற்றும் நிதி ரீதியில் பாதுகாப்பான இளம் இந்தியர்களை உறுதிப்படுத்த முடியும்.

குறைந்த வயதில் சுகாதாரக் காப்பீடு பெறுவதில் இருக்கும் முக்கியமான அம்சம், நீங்கள் மிகக்குறைவான பிரீமியம் செலுத்தி அதிக பலன்களைப் பெற முடியும் என்பதே. சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள் இளைஞர்களுக்குக் குறைவாக இருந்தாலும் சுகாதாரக் காப்பீடு பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது.

சூப்பர் டாப்–அப் பாதுகாப்புடன் கூடிய ஒரு தனிநபர் சுகாதாரக் காப்பீட்டு திட்டமானது அதிக காப்பீட்டு தொகை வரம்புக்கு உங்களைப் பாதுகாக்கும். அது உங்களது நிதி ரீதியான அழுத்தங்களை அகற்றுவதோடு எதிர்பாராத மருத்துவத் தேவைகளுக்கான காலக்கட்டத்தில் நிதி ரீதியிலான ஒத்துழைப்பை அளிக்கும்.

காப்பீட்டுத் துறையில் இந்தியாவின் சுகாதாரக் காப்பீட்டு பிரிவானது அபார வளர்ச்சித் திறனுடன் விளங்குகிறது. இது சுகாதாரக் காப்பீட்டு துறையில் பணியை நிர்ணயித்துக்கொள்ளும் ஆர்வமுள்ள இளையோருக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்த அலையை அதிகபட்சமாகப் பயன்படுத்தி வெற்றிபெறும் இளைய தலைமுறையினர் எப்போது இத்துறையில் சேர்வதற்கான ஆர்வத்துடன் இருக்க வேண்டும். தொடர்ந்து கற்றுக்கொண்டும், வளர்ந்துகொண்டும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *