செய்திகள்

அண்ணா ஆதர்ஷ் கல்லூரி மைதானத்தில் பஞ்சாப் சங்கம் சார்பில் அறுவடை விழா

Spread the love

சென்னை, ஜன.11–

சென்னை பஞ்சாப் சங்கம் சார்பில் நடந்த விழாவில் சென்னையில் வசிக்கும் பஞ்சாபியர்கள் 1000 பேர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரி மைதானத்தில் குளிர்காலம் முடிவடைவதையொட்டியும், அறுவடை திருவிழாவையொட்டியும் கேளிக்கையில் பங்கேற்றனர். சங்கத்தின் செயலாளர் ரமேஷ் லம்பா இந்த ‘லோகிரி’ திருவிழாவை துவக்கி வைத்தார்.

கார்காலம் முடிவடைவதை குறிக்கும் பஞ்சாபியர்களின் முக்கிய பண்டிகையான லோகிரி பண்டிகைசென்னைபஞ்சாப் அசோசியேஷன் சார்பாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையை சேர்ந்த 1000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கு பெற்ற இப்பண்டிகை சென்னை அண்ணா ஆதர்ஷ் கல்லூரி மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பஞ்சாப் செயலாளர் ரமேஷ் லம்பா முன்னின்று “லோகிரி பூஜை” நடத்தி முறைப்படி “லோகிரி தீ”யினை ஏற்றிவைத்தார். கூடிருந்த மக்கள் அனைவரும் லோகிரி பாடல்களுக்கும் இசைக்கும் நடனமாடினர். மேலும் அவர்கள் பாப்கார்ன், கற்கண்டு, எள்ளு விதைகள், வெல்லம் மற்றும் இதர பொருட்களை எரியும் தீயிலே இட்டு லோகிரி பாரம்பரிய முறைப்படி கொண்டாடி மகிழ்ந்தனர். பஞ்சாப் மக்களின் முக்கிய இசை கருவியான “டோல்” முழங்க “கித்தா” மற்றும் “பாங்க்ரா” நடனமாடி அனைவருக்கும் லோகிரி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இந்த ஆண்டு, சென்னையில் லோகிரி திருவிழாவை கொண்டாடும் பொறுப்பினை சென்னை பஞ்சாப் சங்கம் ஏற்றுகொண்டு, நடத்தினர். பஞ்சாபி குழுவினர், பிரபல பஞ்சாபி பாடல்களை பாடி கூட்டத்தை மகிழ்வித்தனர். இதனையடுத்து, சென்னையில் முதல்முறையாக “ரோட்னி அண்ட் ஹிஸ் பேண்ட்” குழுவினர் புதிய பஞ்சாபி மற்றும் பாலிவுட் பாடல்கள் பாடி விழாவை சிறப்பித்தனர்.

திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பஞ்சாப் அஸோசியேஷன் நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் லோகிரி வாழ்த்துகளை தெரிவித்துகொண்டனர்.

சென்னையில் வாழும் பஞ்சாபி மக்கள், அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை பேணி காப்பதிலும் , அவர்களின் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டாடிவருவதிலும் தலைசிறந்தவர்களாக திகழ்ந்து வருகின்றனர் என்று செயலாளர் ரமேஷ் லம்பா தெரிவித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *