வர்த்தகம்

ஹீரோ மோட்டோர்ஸ் ஹார்லி டேவிட்சன் பைக் விற்பனைக்கு ஏற்பாடு

சென்னை, பிப். 6

உலகின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் உற்பத்தியாளராகத் திகழும் ஹீரோ மோட்டோகார்ப், வெளிநாட்டு பிரபல ஹார்லி டேவிட்சன் பைக் விநியோக பிரிவைத் துவக்கியுள்ளது. இந்த பிரிவின் தலைவராக ரவி அவலூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவன்முஞ்சலுக்கு கீழ் அவர் பணியாற்றவுள்ளார். ரவி அவலூர் கூப்பர் நிறுவனத்தில் பணிபுரிந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.

கூப்பருக்கு முன்பு, ‘டுகாட்டி’ வாகன நிறுவனத்தில் ரவி நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

ஹீரோ மோட்டோகார்ப் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில், தற்போதுள்ள 11 ஹார்லி -டேவிட்சன் டீலர்களை தனது வலையமைப்பில் இணைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *