செய்திகள்

வீரமணி ராஜுவுக்கு ஹரிவராசனம் விருது: கேரள அரசு அறிவிப்பு

வீரமணி ராஜுவுக்கு ஹரிவராசனம் விருது:

கேரள அரசு அறிவிப்பு

ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம்

திருவனந்தபுரம், டிச. 25

ஐயப்பன் பக்தி பாடல்கள் மூலம் பிரபலமான பாடகர் எம்.ஆர். வீரமணி ராஜுவுக்கு கேரள அரசு உயரிய ஹரிவராசனம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை வீரமணி ராஜு பாடியுள்ளார். பாடல்கள் மூலம் நாட்டு மக்களிடையே மதநல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் உருவாக ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி 2021-ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது வீரமணி ராஜுவுக்கு அளிக்கப்படுவதாக கேரள அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதில் ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் அடங்கும். சபரிமலையில் மகரவிளக்கு பூஜை தினத்தன்று இந்த விருது அவருக்கு அளிக்கப்படும் என்று கேரள மாநில தேவஸ்வம் வாரிய அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஹரிவராசனம் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *