வாழ்வியல்

ஸ்மார்ட் போன்கள், கணினிகளை கொரோனா வைரஸ் தாக்குகிறதா?

Spread the love

சீனாவிலிருந்து கிளம்பி மின்னல் வேகத்தில் பரவி உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், ஸ்மார்ட் போன்கள் மற்றும் கணினிகளை கூட பதம் பார்க்கும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. உயிரை கொல்லும் வைரஸ்கள், போன்கள், கம்ப்யூட்டர்களை எப்படி பாதிக்கும் என யோசிப்பது சரிதான்.

கொரோனா வைரஸ் மனித குலத்தையே அச்சுறுத்தி வருகிறது. வேக வேகமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால், உலக மக்களும் கொரோனா தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளவும், அதை பற்றிய விழிப்புணர்வுக்காகவும், அதன் அறிகுறிகளை பற்றியும் பல்வேறு அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதேவேளையில், உலக மக்களின் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி அறியும் ஆர்வத்தை பயன்படுத்திக் கொண்டு சைபர் கிரிமினல்கள் புகுந்து விளையாடுகிறார்கள். கொரோனா வைரஸ் பற்றிய PDF, MP4 மற்றும் DOCX ஃபைல்கள் போர்வையில் தான் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர் சைபர் கிரிமினல்களான ஹேக்கர்கள்.

ஆம் நம்முடைய நன்மைக்கு தான் கொரோனா பற்றிய தகவலை யாரோ நமக்கு அனுப்பியுள்ளார்கள் என்ற எண்ணத்தில், போன்களில் இருந்தோ கணினியில் இருந்தோ கொரோனா தொடர்பான ஃபைல்களை டவுன்லோட் செய்தால், ஹேக்கர்களின் வலையில் விழும் வாய்ப்பு உள்ளதாம்.

சைபர் கிரிமினல்கள் அனுப்பும் ஃபைல்கள், கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வீடியோ வழிமுறைகள் , அச்சுறுத்தல் குறித்த அப்டேட்கள், கொரோனாவை கண்டறிவதற்கான நடைமுறைகள் என்பன போன்ற தலைப்பில் அனுப்பப்படுவதாக கூறியுள்ளது பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கை (Kaspersky).

சைபர் கிரிமினல்களால் உருவாக்கப்படும் ஃபைல்கள் நம்முடைய சாதனங்களில் உள்ள டேட்டாக்களை அழிக்க, மாற்றியமைக்க அல்லது பிரதி (xerox) எடுக்கும் திறன் கொண்டவை. மேலும் கணினி அல்லது கணினி நெட்வொர்க்குகளின் செயல்பாட்டில் குறுக்கிடும் என Kaspersky நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க, கொரோனா தொடர்பான ஃபைல்களை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் Extension-களை கவனமாக பாருங்கள். டாக்குமெண்ட்கள் மற்றும் வீடியோ ஃபைல்கள் .exe அல்லது .lnk என்று குறிப்பிடப்பட்டிருக்க கூடாது. அப்படி இருந்தால் அதை டவுன்லோட் செய்வதை தவிர்த்து விடுங்கள் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *