தமிழகத்தின் முன்னணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான சென்னை சில்க்ஸ் பல்வேறு சமுதாய பணிகளில் இந்நிறுவனத்தை இணைத்து செயல்படுகிறது. ஆசிரியர்களை கவுரவித்து ‘குரு வாரம்’ எனும் புதுமை நிகழ்ச்சியை இன்று அறிவித்துள்ளது. இதில், நிறுவனத்தின் உரிமையாளர் டி.கே.சந்திரன், அவர் பார்த்து வியந்த ஆளுமைகளை சிறப்பிக்கும் வகையில் குரு வார நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளார். வர்த்தக நிறுவனங்களில் டி.கே.சந்திரன் எடுத்துள்ள இந்த முன்முயற்சிக்கு சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.