செய்திகள்

நிலத்தடி நீரை வீணாக்கினால் குற்றம்: நிலத்தடி நீர் ஆணையம்

டெல்லி, அக். 24-

இந்தியாவில் நிலத்தடி நீர் பாதுகாப்பு வரலாற்றில் குடிநீர் அல்லது நிலத்தடி நீரை வீணாக்குவது மற்றும் தவறாகப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் 5 வது பிரிவின் கீழ் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் (சி.ஜி.டபிள்யூ.ஏ) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்த வழக்கை குறிப்பிட்டு, குடிநீர் மற்றும் நிலத்தடி நீரை வீணாக்குவதும் தவறாகப் பயன்படுத்துவதும் இனிமேல் இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்கத் தவறினால், ஐந்து ஆண்டுகள் வரை தண்டனையும் ரூ .1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *