வர்த்தகம்

சென்னையில் ‘கிரீன்டெக்’ ரூ.100 கோடியில் தொழிற்சாலை

தொலைநோக்குடன் செயல்படும் தமிழக அரசுக்கு நன்றி

பைக், ஆட்டோ, வேன் தயாரிப்பாளருக்கு பேட்டரி தயாரிக்க

சென்னையில் ‘கிரீன்டெக்’ ரூ.100 கோடியில் தொழிற்சாலை

தலைவராக வாகன நிபுணர் இ.பாலசுப்ரமணியன் நியமனம்

நிறுவனர் புனீத் ஜெயின் தகவல்

சென்னை, அக். 17

தமிழக அரசு தொலைநோக்குடன் செயல்பட்டு, தமிழ்நாட்டில் பல வாகன தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதால் இனி பேட்டரியில் ஓடும் வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளதால் அதற்கேற்ற நவீன பேட்டரி தொழிற்சாலை கிரீன்டெக் சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் நிறுவ அனுமதி அளித்துள்ளது என்று இதன் நிறுவனர் புனித் ஜெயின் தெரிவித்தார்.

மின்சார வாகனங்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரிகள் மற்றும் மின்சக்தி சேமிப்பு சாதனங்கள் தயாரிக்கும் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது.

ஐஐடி-மெட்ராஸ் ஆராய்ச்சி மையத்தில் இது நிறுவப்பட்டு, பேணி வளர்க்கும் பருவத்தில் தொழிலகத் துறையில் அனுபவம் மிக்க பல வல்லுனர்களை முதலீட்டாளர்களாக க்ரீன்டெக் ஈர்த்திருக்கிறது. சென்னையில் க்ரீன்டெக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் மையமும் மற்றும் முன்னோடி உற்பத்தி தொழிலகமும் ஏற்கனவே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், வேன் மற்றும் விவசாயப்பணிக்கான டிராக்டர்கள் ஆகியவற்றிற்கு பொருத்தமான உயர்தொழில்நுட்பம் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரிகள் மற்றும் அவைகளுக்கான தனிஉரிமைத்துவ பேட்டரி மேலாண்மை சாதனங்களை தயாரிக்கும்.

கீழை நாடுகளின் டெட்ராய்ட் என்று சென்னை அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது உலகளவில் ஆட்டோமொபைல் தொழில்துறையானது, மின்சார வாகனங்களுக்கு மாறிவருகின்ற நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த தொலைநோக்குப் பார்வையும், முனைப்புத்திட்டமும், இந்தியாவின் மின்சார வாகன தொழில்துறையானது எதிர்கால சவால்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இருப்பதற்கு நிச்சயம் உதவும் என்றும் புனீத் ஜெயின் கூறினார்.

க்ரீன்டெக் நிறுவனத்தின் இயக்குனர்களாக ஏ. சுமந்த்ரன் (அசோக் லேலேண்டு நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவர்) மற்றும் திரு. லட்சுமிநாராயன் (காக்னிசண்ட் நிறுவனத்தின் இணை-நிறுவனர் மற்றும் முன்னாள் துணைத்தலைவர்) ஆகியோர், பாலசுப்ரமணியத்தின் நியமனத்தை அங்கீகரித்துள்ளனர். தமிழ்நாடு அரசு உரியகாலத்தில் எடுத்திருக்கும் இந்த கொள்கை முடிவின் காரணமாக, சுய-சார்புக்கான இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கும் மற்றும் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகன தொழில்துறைக்கும் ஒரு வலுவான பங்களிப்பாளராக க்ரீன்டெக் உருவாகும் என்ற தங்களது நம்பிக்கையையும் இத்தருணத்தில் அவர்கள் வௌிப்படுத்தியிருக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *