வாழ்வியல்

பசுமை கணினி ஆராய்ச்சியில் மாணவர்கள் செய்வது என்ன?

பசுமை கணினி ஆராய்ச்சியில் மாணவர்கள் என்ன செய்கிறார்கள்?

கணினியின் மூலம் செய்யப்படும் செயல்கள் கணிமைச் செயல்பாடுகள் எனப்படும். இவற்றை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதபடி செய்தலை பசுமைக் கணினி என்கின்றனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கை பொருட்களை பயன்படுத்துவதைப் போன்றது இது. கணினியை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், உருவாக்குதல், பயன்படுத்துதல், அழித்தல் உள்ளிட்டவை இதன் நோக்கம். கணினியுடன் தொடர்புடைய பொருட்களான திரை, அச்சுப்பொறி, நினைவக சாதனங்கள், தொலைத்தொடர்பு சாதனங்களும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, அழிக்கப்பட வேண்டும். இத்தகைய சாதனங்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு, வேறு கருவிகளாக மாற்றம் பெறலாம். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

எலக்ட்ரானிக் பொருட்களின் கழிவு சுற்று சூழலுக்கு பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது. இதை தவிர்க்க மாணவர்கள் பசுமை கணினி உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் கணினி சர்வரை அதிகம் பயன்படுத்துகின்றன. அதை மாணவர்கள் மத்தியில் பரவலாகி வருகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் 48 ஆய்வு கட்டுரைகளை ஆராய்ச்சி மாணவர்கள் சமர்ப்பித்தனர். இதில் மலேசிய பல்கலையை சேர்ந்த பேராசிரியர்கள் அகமத்கான், பரசுராமன், இளம் வழுதி, கோபி ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர். பசுமை கணினி ஆராய்ச்சி உலகலாவிய ஒன்றாக வளர்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *