செய்திகள்

திருவான்மியூர் கலாஷேத்திரா மைதானத்தில் பிப்ரவரி 2–ந்தேதி வரை ‘கிராமத்து திருவிழா’

Spread the love

சென்னை, ஜன. 28–

பாரம்பரிய உணவுகள், விளையாட்டு மற்றும் விற்பனை கண்காட்சியுடன் சென்னையில் கிராமத்து திருவிழா பிப்ரவரி 2–ந்தேதி வரை நடைபெறுகிறது என்று பிக்–பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தார் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:–

பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் சென்னையில், ‘கிராமிய உற்சவம் 2020’ எனும் பெயரில் மாபெரும் கிராமத்து திருவிழா, கண்காட்சி சென்னை திருவான்மியூர் கலாஷேத்திரா மைதானத்தில் கடந்த 24–ந்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் கேப்பங்களி, கம்பு புட்டு, சிறுதானிய உணவுகள் என தமிழரின் பாரம்பரிய உணவுகள் விற்பனைக்கு உள்ளது.

பல்வேறு மாநிலங்களில் புகழ் பெற்ற கைத்தறி உடைகள், கைவினைப் பொருட்கள் நேரடி விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் குறைந்த விலையில் வேண்டியவற்றை விருப்பம் போல வாங்கி செல்லலாம்.

ருத்ரட்சம், சாளக்கிராமக் கற்கள், நவரத்தினங்கள், உபரத்தினங்கள், 21 மூலிகைகளை கொண்ட குளியல் பவுடர், பித்தளையால் ஆன சிற்பங்கள் உள்ளிட்ட ஆன்மிக, கலை பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியில் கோலி, உறியடி, பம்பரம், பாண்டி போன்ற தமிழர் விளையாட்டுகள் இடம் பெற்று வருகின்றன.

மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளை சேர்ந்த பழக்கப்படுத்தப்பட்ட பறவைகளும் இருக்கின்றன. விரும்புவோர் இதனை வாங்கி செல்லலாம். கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், பறையாட்டம் என பாரம்பரிய ஆட்டங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த திருவிழா பிப்ரவரி மாதம் 2–ந்தேதி வரை நடைபெறுகிறது.

திருவிழாவில் கிரமத்து உணவுகளை வாங்கி சாப்பிட்டு மகிழலாம். பாரம்பரிய உடைகள் உள்ளிட்ட பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கலாம்.

இந்த திருவிழா சென்னைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்று பிக்–பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தார் தெரிவித்தனர். மேலும் விவரங்களுக்கு 7667232984, 9094301383.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *