செய்திகள்

குழந்தைக்கு ‘காங்கிரஸ்’ என பெயர் சூட்டிய அரசு ஊழியர்

Spread the love

ஜெய்ப்பூர், ஜன. 24–

ராஜஸ்தானில் அரசு ஊழியர் ஒருவர் தனது குழந்தைக்கு காங்கிரஸ் என பெயரிட்டுள்ளார்.

உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளக் கூடிய எந்த ஒரு செயலும் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் அனைத்திலும் ஒரு புதிய மாற்றம் இருக்க வேண்டும் என்பதே அனைவரது எண்ணமுமாகவும் உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மீது கொண்ட விசுவாசத்தால் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்குப் பிறந்த குழந்தைக்குக் கட்சியின் பெயரைச் சூட்டியுள்ளார்.

‘எதிலும் வித்தியாசம் வேண்டும்’ என்பதனை தனக்குப் பிறந்த குழந்தைக்குப் பெயர் வைப்பதில் வெளிப்படுத்தியுள்ளார். கட்சியின் மீது கொண்ட அதீத அன்பால் குழந்தைக்கு “காங்கிரஸ்” எனப் பெயரிட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் ஜெயின். இவர் ராஜஸ்தான் முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் வேலை செய்து வருகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஆவார். இவரது குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியத்தைக் கொண்டது. இவருக்கு ஜூலை மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு “காங்கிரஸ்” எனப் பெயரிடப்போவதாகத் தனது குடும்பத்துடன் கலந்து பேசியுள்ளார். அதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர் தனது முடிவிலிருந்து மாறாமல் விடாப்பிடியாக இருந்ததால், குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனை அடுத்து குழந்தைக்கு “காங்கிரஸ்” எனப் பெயர் சூட்டினார் வினோத் ஜெயின். குழந்தைக்கு 18 வயதாகும் போது , தன்னைப்போல தன்னுடைய குழந்தையும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்படும் என்று வினோத் ஜெயின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *