செய்திகள் வர்த்தகம்

‘சாக்க்ஷம்’ எரிபொருள் சிக்கன விழா: போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

சென்னை, பிப். 18

எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு ‘சாக்க்ஷம்’ நிகழ்ச்சி நிறைவு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசுகையில், மக்கள் தனித்தனியாக பைக், கார்களில் போகாமல் பஸ், வேன்களில் போக பழக வேண்டும். கொரோனா காலத்தில் தங்குதடையின்றி பெட்ரோல், டீசல், கியாஸ், ஆயில் சப்ளை செய்த எரிபொருள் துறை நிர்வாகிகளை பாராட்டினார். தொற்றுநோய் பிரச்சனை இருந்தாலும் எரிபொருள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது சாதனை என்று பாராட்டினார். பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

இந்தியன் ஆயில் தென்மண்டல செயல் இயக்குனர் பி.ஜெயதேவன் பேசுகையில், எரிபொருள் வீணாவதை தடுத்தல், சிக்கனமாக பயன்படுத்துதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் பணிகளில் பெட்ரோலிய துறை அக்கறையுடன் செயல்படுகிறது என்றார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஆன்லைனில் பேசிய செயல் இயக்குனர் பி.ஜெயதேவன், பெட்ரோல், டீசல், கியாஸ் சேமிப்புக்கு இளைஞர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். பல்வேறு சேமிப்பு யுக்திகளை தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்கு விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ‘சாக்க்ஷம்’ ஒரு மாத காலம் நடத்தப்பட்டது. ஆட்டோக்களில் கரும்புகை பரிசோதனை, சைக்கிள் ஊர்வலம், கலந்துரையாடல், விவாதம், இலவச மாசுகட்டுப்பாடு பரிசோதனை, சிக்கன எரிபொருள் டிரைவருக்கு விருது, கலந்துரையாடல், விளம்பர பிரச்சாரம், பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. கல்லூரி பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டி, சமையல் போட்டி தொழிற்சாலைகளுக்கு சிக்கன எரிபொருள் பய்னபாடு போட்டி நடத்தப்பட்டது.

பெட்ரோலியம் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் கூட்டாக ‘சாக்க்ஷம்’ நடத்தின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *