செய்திகள்

நவராத்திரி: புதுச்சேரி கைவினை கலைஞர்கள் தயாரித்த கொலு பொம்மைகள் கண்காட்சி

Spread the love

சென்னை, செப். 21-

இம்மாதம் 29–ந் தேதி நவராத்திரி ஆரம்பம். அதை முன்னிட்டு, சென்னை மேற்கு மாம்பலம் ஆரிய கௌடா சாலையில் அமைந்துள்ள பாணிக்கிரஹா மண்டபத்தில் புதுச்சேரி கைவினை கலைஞர்கள் மற்றும் நலச்சங்க இணைந்து, கொலு பொம்மைகள் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. கலைமாமணி பாம்பே ஞானம், இக்கண்காட்சியை துவக்கி வைத்தார். திரைப்பட நடிகை லாவண்யா முதல் விற்பனையை துவக்கிவைத்தார். பிரபல ஓவியர் மணியம் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவனையின் பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் பேராசிரியர் ஸ்ரீதேவி, புதுச்சேரி மாநில விருது பெற்ற கலைஞர்கள் கலைமாமணி ராஜீ சில்வி, சேகர் உள்ளிட்டோர் கண்காட்சியில் பங்கேற்றனர்.

புதுச்சேரி கைவினை கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய கொலு பொம்மைகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பாரம்பரியம் மிக்க மண்ணாலான செட் பொம்மைகள், டெரக்கோட்டா பொம்மைகள், காதிதக் கூழ், தசவதாரம், ராமாயணம், கார்த்திகை பெண்கள், திருமண விருந்து, புராதான கதைகளை சித்தரிக்கும் பொம்மைகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.

அக்டோபர் 8 வரை…

கண்காட்சியில் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு வடிவங்களில் பல்வேறு விலைகளில் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. அக்டோபர் 8–ந் தேதி வரை கண்காட்சி நடத்தப்படும். இக்கண்காட்சிக்கு தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *