வர்த்தகம்

2வது ஆண்டாக ‘புளூ ஸ்டார்’ நிறுவனத்திற்கு தங்க மயில் விருது

சென்னை, மார்ச். 10

வீடு, அலுவலகங்களுக்கு ஏசி, நீர் சுத்திகரிப்பான் தயாரிக்கும் புளூ ஸ்டார் நிறுவனம் 2வது ஆண்டாக சிறந்த நிர்வாக நடைமுறைகளுக்காக தங்க மயில் சாதனை விருதை பெற்றுள்ளது என்று நிர்வாக இயக்குனர் பி.தியாகராஜன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எம்.என். வெங்கடாச்சலயா தலைமையான குழு இந்த விருதை காணொளி காட்சி மூலம் வழங்கியது என்று நிர்வாக இயக்குனர் பி.தியாகராஜன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

77 ஆண்டு பாரம்பரிய இந்நிறுவனம் தனது நிர்வாகத்தில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை ஏற்று, நவீனமயமாக்கி திறம்பட செயல்படுகிறது. இதன் நிர்வாக திறமையை பாராட்டு 2வது ஆண்டாக நடப்பு ஆண்டுக்கு சாதனை தங்க மயில் விருதை வழங்கியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் இந்திய கம்பெனி செயலாளர் சங்கம் சாதனை விருதையும் பெற்றது என்றார் பி.தியாக ராஜன். இந்நிறுவனம் நிர்வாகத்தில் ஒளிமறைவின்றி நிர்வாகம், நம்பிக்கை, உண்மை நேர்மையுடன் செயல்பட்டு வருவதால் இந்த சாதனை விருது கிடைத்துள்ளது என்றார்.

இந்நிறுவனம் வணிகத்தில் புதுமைபுகுத்தி, நிர்வாகத்தில் சிறந்து விளங்குகிறது. இதனால் ‘புளூ ஸ்டார் வழி… தனி வழி’ என்று பாராட்டை பெற்றுள்ளது என்றார் அவர்.

பி.தியாகராஜன் பேசுகையில், தொடர்ந்து 2வது ஆண்டாக தங்க மயில் விருது உலகத்தர நிர்வாக நடைமுறைகளுக்கு கிடைத்தது புளூ ஸ்டாருக்கு பெரிய கவுரவம் ஆகும். கொரோனா வைரஸ் பரவும் காலத்திலும் சவால்களை சந்தித்து வெற்றி பெற்றுள்ளது என்றார்.

இந்திய நிறுவன டைரக்டர்கள் இன்ஸ்டியூட் இந்த தங்க மயில் விருதை வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *