செய்திகள்

தேவர் சிலைக்கு இன்று முதல் நவம்பர் 1ந் தேதி வரை 13 கிலோ தங்கக் கவசம்

தேவர் சிலைக்கு இன்று முதல் நவம்பர் 1ந் தேதி வரை 13 கிலோ தங்கக் கவசம்

கையொப்பமிட்டு வங்கியிலிருந்து பெற்றார் ஓ.பன்னீர்செல்வம்

மதுரை, அக். 23

தேசிய தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை விழாவை முன்னிட்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தேவர் திருவுருவச் சிலைக்கு வழங்கப்பட்ட 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து அண்ணா தி.மு.க. பொருளாளாளராக உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேவர் திருமகனார் நினைவாலயக் காப்பாளர் க.காந்திமீனாள் நடராஜத் தேவர் ஆகியோரால் இன்று (23ந் தேதி) கையொப்பமிட்டு பெற்றுக் கொள்ளப்பட்டது.

தங்க கவசமானது தேவர் திருவுருவச் சிலையில் இன்று முதல் அடுத்த மாதம் நவம்பர் 1ந் தேதி வரை அணிவிக்கப்பட்டு 2ந் தேதி அன்று மீண்டும் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுடப துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட கலெக்டர் டி.ஜி. வினய், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு), கே.மாணிக்கம் (சோழவந்தான்), பி. பெரியபுள்ளான் (எ) செல்வம் (வேலூர்), எஸ். எஸ். சரவணன் (மதரை தெற்கு), மணிகண்டன் (ராமநாதபுரம்), சதன் பிரபாகர் (பரமக்குடி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *