செய்திகள்

தொடர் சரிவில் தங்கம்: ஒரு சவரன் ரூ.33,904

சென்னை, மார்ச் 4–

ஆபரணத் தங்கத்தின் விலை 34 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.33,904 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதில் இருந்து அதன் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தும் தங்கம் விலை இறங்கு முகத்திலேயே காணப்படுகிறது. அந்த வகையில் நேற்றும் தங்கம் விலை குறைந்திருந்தது.

இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை 34 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,238க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.33,904 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,600க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *